December 7, 2024
ஸ்கோடா ஆட்டோ இந்தியாவின் முதல் 4எம் குறைவான எஸ்யூவி பிரிவைச் சேர்ந்த கைலாக், இப்போது அதன் முழு வேரியண்ட்கள் மற்றும் விலைகளுடன் வெளிவந்துள்ளது.
கைலாக் கிளாசிக், சிக்னேச்சர், சிக்னேச்சர்+ மற்றும் பிரெஸ்டீஜ் ஆகிய நான்கு வேரியண்ட்களில் அறிமுகமாகி உள்ளது. கைலாக் க்ளாசிக் ட்ரிம்எஸ்யூவியின் ஆரம்ப விலை ரூ 7.89 லட்சம் ஆகும்.கைலாக் பிரெஸ்டீஜ் ஏடி தொடக்க விலை ரூ 14,40,000 லட்சம் ஆகும்.மேலும்,முதல் 33,333 வாடிக்கையாளர்களுக்கு 3 ஆண்டு நிலையான பராமரிப்பு தொகுப்பு இலவசமாக கிடைக்கும் (எஸ்எம்பி). கைலாக் எஸ்யுவிக்கான முன்பதிவுகள் மாலை 4 மணிக்கு திறக்கப்படும். டெலிவரிகள் 2025 ஜனவரி 27 அன்று தொடங்கும்.
ஸ்கோடா ஆட்டோ இந்தியாவின் பிராண்ட் இயக்குனர் பெட்ர் ஜானெபா கூறுகையில்,
‘இந்தியாவில் ஸ்கோடா பிராண்டின் புதிய சகாப்தத்தின் வருகையை புத்தம் புதிய கைலாக் குறிக்கிறது.ஸ்கோடா கைலாக் எங்களுக்கு மட்டுமல்ல,இந்த பிரிவுக்கும் ஒரு கேம்சேஞ்சராக இருக்கும்.இரண்டு டிரான்ஸ்மிஷன்கள், நான்கு வேரியண்ட்கள் மற்றும் ஏழு வண்ணங்களின் தேர்வுடன் கைலாக் கிடைக்கிறது.இது உயர் செயல்திறன்,திறமையான மற்றும் நம்பகமான 1.0 டிஎஸ்ஐ இயந்திரத்தால் இயக்கப்படுகிறது.இது 85கேடபிள்யூ சக்தியையும் 178என்எம் டார்க்கையும் உற்பத்தி செய்கிறது,ஆறு வேக மேனுவல் அல்லது ஆறு வேக டார்க் தானியங்கி கன்வெர்ட்டர் விருப்பத்துடன் வருகிறது. வாடிக்கையாளர்கள் கிளாசிக், சிக்னேச்சர், சிக்னேச்சர்+ மற்றும் டாப்-ஆஃப்-தி-லைன் பிரெஸ்டீஜ் ஆகிய நான்கு வேரியண்ட்கள் இடையே விரும்பியதைத் தேர்வு செய்யலாம். டொர்னடோ ரெட், பிரிலியன்ட் சில்வர், கேண்டி ஒயிட், கார்பன் ஸ்டீல், லாவா ப்ளூ, டீப் பிளாக் மற்றும் கைலாக் பிரத்யேக ஆலிவ் கோல்டு ஆகிய ஏழு வண்ணங்களில் விற்பனைக்கு கிடைக்கிறது.
கைலாக் க்ளாசிக் 1.0 டிஎஸ்ஐ எம்டி மாடல் ரூ. 7,89,000 ,கைலாக் சிக்னேச்சர் 1.0 டிஎஸ்ஐ எம்டி மாடல் ரூ.9,59,000, கைலாக் சிக்னேச்சர் 1.0 டிஎஸ்ஐ ஏடி மாடல் ரூ. 10,59,000,கைலாக் சிக்னேச்சர் +1.0 டிஎஸ்ஐ எம்டி மாடல் ரூ.11,40,000, கைலாக் சிக்னேச்சர்+ 1.0 டிஎஸ்ஐ ஏடி மாடல் ரூ. 12,40,000, கைலாக் ப்ரெஸ்டிஜ் 1.0 டிஎஸ்ஐ எம்டி மாடல் ரூ.13,35,000 கைலாக் ப்ரெஸ்டிஜ் 1.0 டிஎஸ்ஐ ஏடி மாடல் ரூ. 14,40,000 அனைத்து விலைகளும் எக்ஸ்-ஷோரூம் விலை ஆகும்.
தங்கள் எஸ்யூவியில் உள்ள ஒவ்வொரு அம்சத்தையும் விரும்பும் வாடிக்கையாளர்களுக்கான கைலாக் தான் டாப்-ஆஃப்-தி-லைன் பிரெஸ்டீஜ் ஆகும். கைலாக்கின் இந்த டாப்-டிராயர் வேரியண்ட்டில் ஆன்டி-பிஞ்ச் தொழில்நுட்பத்துடன் கூடிய எலக்ட்ரிக் சன்ரூஃப், ஆர் 17 டூயல் டோன் அலாய் சக்கரங்கள், ஆட்டோ ஹெட்லேம்ப்கள், வைப்பர்கள், கார்னரிங் செயல்பாட்டுடன் கூடிய எல்இடி ஃபோக்லைம்ப்கள், ஸ்கோடா கிரிஸ்டலின் எல்இடி ப்ரொஜெக்டர் ஹெட்லேம்ப்கள், ஆம்பியன்ட் இன்டீரியர் லைட்டிங் உள்பட எனைய அம்சங்கள் உள்ளன. சம்மந்தப்பட்ட பிரிவில் முதன் முதலாக, இருக்கை காற்றோட்டத்துடன் கூடிய மின்சார ரீதியாக சரிசெய்யக்கூடிய ஆறு வழி முன் இருக்கைகள் பொருத்தப்பட்டுள்ளன.
மேலும், சிக்னச்சர் மற்றும் அதற்கு மேற்பட்ட அனைத்து வேரியண்ட்களிலும், ஆறு வேக டார்க் கன்வெர்ட்டர் ஆட்டோமேட்டிக் விருப்பத்தைக் கொண்டிருந்தாலும், தன்னிச்சையான மேனுவல் கியர் ஷிஃப்ட்களுக்கான ஸ்டீயரிங் பொருத்தப்பட்ட துடுப்பு-ஷிஃப்டர்களை பிரெஸ்டீஜ் வழங்குகிறது. என்றார்.