October 23, 2024 தண்டோரா குழு
ஸ்கோடா ஆட்டோ இந்த ஆண்டு பிப்ரவரியில் ஒரு காம்பாக்ட் எஸ்யூவி அறிவிப்புடன் இந்தியாவில் பிராண்டை வளர்ப்பதற்கான தனது லட்சியங்களை தெளிவுபடுத்தியது. ஒரு நாடு தழுவிய பெயரிடும் பிரச்சாரம் காரணமாக ‘கைலாக்’ அதன் பெயரைப் பெற்றது.
நவம்பர் 6 அன்று உலகளவில் அறிமுகமாகும்.கைலாக் வாகன அறிமுகத்துடன், ஸ்கோடா ஆட்டோ இந்தியா தனது சொகுசு சலுகையான கோடியாக் மற்றும் ஸ்கோடா ஆட்டோவின் இந்தியா 2.0 திட்டத்தின் முதல் வெளியீடான நடுத்தர அளவிலான எஸ்யூவி குஷாக் உள்ளிட்ட பல எஸ்யூவிகளை வழங்கும். இந்தியாவின் மொத்த கார் சந்தையில் கிட்டத்தட்ட 30% வைத்திருக்கும் ஸ்கோடா ஆட்டோ, இந்தியாவில் வேகமாக வளர்ந்து வரும் பிரிவுகளில் ஒன்றான சப்-4 எம் பிரிவில், கைலாக் வாகனத்தைக் கொண்டிருக்கும்.
நவீன, உறுதியான, மஸ்க்யுலர் ஸ்டைலிங், நிரூபிக்கப்பட்ட ஸ்கோடா டிரைவிங் டைனமிக்ஸ், சமரசமற்ற பாதுகாப்பு மற்றும் சிறப்பான அம்சங்களின் கலவையுடன் காம்பாக்ட் எஸ்யூவி பிரிவில் ஒரு புதிய பரிமாணத்தை சேர்க்கும் வகையில் கைலாக் வடிவமைக்கப்பட்டுள்ளது.
ஸ்கோடா ஆட்டோ ஃபோக்ஸ்வேகன் இந்தியா மேலாண் இயக்குநரும் தலைமை நிர்வாக அதிகாரியுமான பியூஷ் அரோரா பேசுகையில்,
“ஸ்கோடா இந்தியாவின் முதல் காம்பேக்ட் எஸ்யூவியான கைலாக் வாகனத்தை வழங்குவதில் பெருமிதம் கொள்கிறேன். எங்கள் ‘மேக் இன் இந்தியா’ உறுதிப்பாட்டை வலுப்படுத்தும் வகையில், கைலாக் உயர் மட்ட உள்ளூர்மயமாக்கலுடன் வடிவமைக்கப்பட்டுத் தயாரிக்கப்படுகிறது. இந்தியாவில் வடிவமைக்கப்பட்டுத் தயாரிக்கப்பட்ட கைலாக் வாகனம், இந்தியாவில் மிகப் பெரிய மாற்றத்தை நிச்சயம் ஏற்படுத்தும்’ என்றார். புதிய வாடிக்கையாளர்களை கட்டாயம் ஈர்க்கும் அதி நவீன உறுதியான, கைலாக் வாகனம் இந்திய வாடிக்கையாளர்களின் வளர்ந்து வரும் விருப்பங்களை மனத்தில் கொண்டு வடிவமைக்கப்பட்டுள்ளது.
இந்த ஸ்கோடா சீரற்ற சாலை மேற்பரப்புகளைச் சமாளிப்பதற்கும், எஸ்யூவி அம்சங்களைக் வாகனத்திற்கு வழங்குவதற்கும் சக்கரத்தைச் சுற்றி அதிக கிரவுண்ட் கிளியரன்ஸ் மற்றும் தாராள் இடவசதியைக் கொண்டிருக்கும். இந்த வடிவமைப்பு வழக்கமான ஸ்கோடா எஸ்யூவி மொழியை முன்புறத்தில் தக்க வைத்துக் கொள்வதுடன், மேம்பட்ட மற்றும் துல்லியமான டிஆர்எல் ஒளி சிக்னேசர்கள் போன்ற சிறப்புகளைச் சேர்க்கும். வரவிருக்கும் எஸ்யூவி வாகனத்தின் பக்கவாட்டிலும், பின்புறத்திலும், கட்டமைப்பிற்கு அதிக மதிப்பைக் கொடுக்கும் வகையில் அறுகோண வடிவத்தில் இருக்கும்.