August 10, 2017 தண்டோரா குழு
ஸ்டாலினுக்கு ஏற்பட்டுள்ள காழ்ப்புணர்ச்சி காய்ச்சலை எந்த மருந்தாலும் குணப்படுத்த முடியாது என சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் கூறியுள்ளார்.
டெங்குவின் பாதிப்பு தமிழகத்தில் அதிகமாக இருக்கிறது என்ற உண்மைத் தகவலை டில்லியில் பேட்டியளித்த தமிழக அரசின் சுகாதாரத்துறை செயலாளர் ஜெ. ராதாகிருஷ்ணன் பகிரங்கமாக ஒப்புக் கொண்டிருக்கிறார்.
தமிழகத்தில் டெங்கு கட்டுப்பாட்டில் உள்ளது. யாரும் பீதியடைய வேண்டியதில்லை என்று சட்டமன்றத்தில் சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் பேசியது பொய்யென இப்போது நிரூபிக்கப்பட்டுள்ளது. டெங்கு காய்ச்சலால் மக்கள் பாதிப்படைவதைப் பற்றி முதல்வர் எடப்பாடி பழனிசாமியும் கவலைப்படவில்லை என திமுக செயல் தலைவர் முக ஸ்டாலின் கடந்த சில தினங்களுக்கு முன் அறிக்கை வெளியிட்டிருந்தார்.டெங்கு நோய் குறித்த ஸ்டாலினின் அறிக்கைக்கு சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் பதில் அளித்துள்ளார்.
இது குறித்து அவர் கூறும்போது,
டெங்கு போன்ற எந்த நோயையும் ஓட ஓட விரட்டும் ஆற்றல் தமிழக அரசுக்கு உண்டு.பல்முனை நடவடிக்கைகளால் டெங்கு தமிழகத்தில் கட்டுக்குள் உள்ளது. ஸ்டாலினுக்கு ஏற்பட்டுள்ள காழ்ப்புணர்ச்சி காய்ச்சலை எந்த மருந்தாலும் குணப்படுத்த முடியாது என சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் கூறியுள்ளார்.