July 24, 2017 தண்டோரா குழு
அமெரிக்காவில் Modular Smart Phone பேஸ்புக் நிறுவனம் தயாரிக்கவுள்ளது என்று தகவல் வெளியாகியுள்ளது.
பேஸ்புக் நிறுவனம் பல புதிய திட்டங்களால் மக்களை கவர்ந்துள்ளது. உலகெங்கும் உள்ள மக்கள் பேஸ்புக்கை பயன்படுத்தி வருகின்றனர். தற்போது அந்த நிறுவனம் ஸ்மார்ட்போன் சந்தையில் கால்பதிக்க திட்டமிட்டுள்ளது.
இந்த ஸ்மார்ட் போனை தயாரிக்க காப்புரிமை விண்ணப்பத்தை கடந்த ஆண்டு பேஸ்புக் நிறுவனம் சமர்ப்பித்தது. அந்த காப்புரிமைக்கு ஒப்புதல் கிடைத்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.இந்த காப்புரிமையின் மூலம் மாடுலர் எலெக்ட்ரோ மெக்கானிகல் சாசனத்தை பேஸ்புக் புதிதாக தாயரிக்க இருப்பதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
இந்த புதிய ஸ்மார்ட் போனில் ஸ்பீக்கர், டச் ஸ்க்ரீன் டிஸ்ப்ளே, மைக்ரோபோன், மற்றும் ஜிபிஎஸ் இருக்கும். இந்த ஸ்மார்ட்போனில் உள்ள பாகங்களை மாற்றி அமைக்கவும் முடியும் எனக் கூறப்படுகிறது.
இந்த போனை தயாரிப்பவர்கள் இதற்கு முன், கூகுள் நிறுவனத்தின் அரா என்னும் திட்டத்தில் பணிபுரிந்து வந்தவர்கள், தற்போது 3டி பிரிண்ட் நுட்பத்தை பயன்படுத்தி இந்த மாடுலர் சாதனங்களை தயாரிக்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
மேலும், பேஸ்புக் நிறுவனம் இதுபோன்ற சாசனத்தை தயாரிக்க முயற்சி செய்வது, இது முதல் முறை அல்ல. கடந்த 2௦11-ம் ஆண்டு, தைவான் நாட்டின் ஸ்மார்ட்போன் நிறுவனமான HTC-யுடன் சேர்ந்து HTC-சாசா மற்றும் HTC-சல்சா என்னும் இரண்டு ஸ்மார்ட் போனை வெளியிட்டது என்பது குறிப்பிடத்தக்கது.