December 19, 2022
தண்டோரா குழு
ஸ்ரீ அகில பாரத ஐயப்பசேவா சங்கம் சாய்பாபாகாலனி கிளை முதலாம் ஆண்டு துவக்க விழாவை முன்னிட்டு, மகா அன்னதானம் நடைபெற்றது.
ஸ்ரீ அகில பாரத ஐயப்ப சேவா சங்கத்தின் சாய்பாபாகாலனி கிளை துவங்கப்பட்டு ஒரு ஆண்டு நிறைவடைந்த நிலையில் முதலாம் ஆண்டு மகா அன்னதான நிகழ்ச்சி சாய்பாபாகாலனியில் உள்ள நாகசாய் மந்திர்,சாய்தீப் திருமண மண்டபத்தில் நடைபெற்றது.
முதலாம் ஆண்டு துவக்க விழாவில் முன்னதாக மகா கணபதி ஹோமம்,சுவாமி ஐயப்பன் பஜனையுடன்,சிறப்பு பூஜை நடைபெற்றது. இதனை தொடர்ந்து நடைபெற்ற மகா அன்னதானத்தை சட்டமன்ற உறுப்பினர் அம்மன் கே அர்ச்சுனன் துவக்கி வைத்தார்.
அன்னதான விழாவிற்கான ஏற்பாடுகளை அகில பாரத ஐயப்பா சேவா சங்க சாய்பாபாகாலனி கிளை நிர்வாகிகள் சேகர்,கருணாகரன், குமரன்,மற்றும் மதுரை மகாலிங்கம், ரமேஷ், பழனிசாமி,மாதவன் உட்பட பலர் செய்திருந்தனர். மகா அன்னதான பெருவிழாவில் பக்தர்கள் பலர் கலந்து கொண்டனர்.