• Download mobile app
27 Nov 2024, WednesdayEdition - 3213
FLASH NEWS
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு
  • தமிழ்நாட்டில் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் வெயில் பதிவு!
  • “சந்திரபாபு நாயுடு கூறும் அனைத்துமே கட்டுக்கதைகள்” – ஜெகன் மோகன் ரெட்டி
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

ஸ்ரீ உத்தண்டராயர் திருக்கோவில்கள் மகா கும்பாபிஷேக விழா

June 2, 2022 தண்டோரா குழு

கோவையை அடுத்த பனப்பட்டியில் உள்ள அருள்மிகு ஸ்ரீ செல்வ கணபதி ஸ்ரீ உத்தண்ட ராக்கியண்ணன் ஸ்ரீ உத்தண்டராயர் திருக்கோவில்கள் மகா கும்பாபிஷேக விழா வெகு விமரிசையாக நடைபெற்றது.

கோவை மாவட்டம், பொள்ளாச்சி வட்டம், பனப்பட்டி கிராமத்தில் எம்மே குலம் மற்றும் சக்கியகுல குலதெய்வங்களாகிய அருள்மிகு ஸ்ரீ செல்வ கணபதி ஸ்ரீ உத்தண்ட ராக்கியண்ணன் ஸ்ரீ உத்தண்டராயர் திருக்கோவில்கள் கும்பாபிஷேக விழாகடந்த 16 ந்தேதி முகூர்த்தகால் நடுதலுடன் விழா துவங்கியது.

தொடர்ந்து விழாவில்,பாலாலயம் முளைப்பாரி இடுதல் கணபதி ஹோமம், சுதர்ஷன ஹோமம், மகாலெட்சுமி ஹோமம், நவக்கிரக ஹோமம். கிராம சாந்தி ,நிலத்தேவர் வழிபாடு , புனித மண் எடுத்தல், முளைபாலிகை இடுதல் . கலசங்களில் புனித நதிகளின் புனித நீர் கொண்டு வரப்பட்டு கலசங்கள் மற்றும் முனைப்பாரி விநாயகர் கோவிலில் இருந்து முக்கிய வீதிகளில் உலா வந்து, அருள்மிகு ஸ்ரீ செல்வ கணபதி, ஸ்ரீ உத்தண்ட ராக்கியண்ணன், ஸ்ரீ உத்தண்டராயர் திருக்குட நன்னீராட்டு ,விழா நடைபெற்றது.

பின்னர் கோவில் கலசங்களில் புனித நீர் ஊற்றப்பட்டது.பின்னர் சிறப்பு அலங்கார, அபிஷேக பூஜைகள் செய்யப்பட்டு பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது.விழாவிற்கான ஏற்பாடுகளை கோவில் தலைவர் வேலுச்சாமி மற்றும் எம்மே குலத்தார்,சக்கி குலத்தார் மற்றும் விழா கமிட்டியினர் உறுப்பினர்கள் ஆகியோர் இணைந்து செய்தருந்தனர்.

மேலும் படிக்க