November 26, 2022 தண்டோரா குழு
கோவை குனியமுத்தூரில் உள்ள ஸ்ரீ கிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் 18-வது பட்டமளிப்பு விழா கல்லூரி வளாகத்தில் நடைபெற்றது.
இதில் முன்னாள் காவல்துறை கண்காணிப்பாளர்,டி.என்.பி.எஸ்.சி முன்னாள் உறுப்பினருமான ரத்தினசபாபதி சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு 2109 இளங்கலை மற்றும் முதுகலை பட்டதாரிகள்,2 எம்.பில் மற்றும் 17 பி.ஹெச்.டி ஆராய்ச்சியாளர்களுக்கு பட்டம் வழங்கினார். மேலும் இதில் பல்கலைக்கழக அளவில் 39 ரேங்க் பெற்றவர்களுக்கு கௌரவித்து சான்றிதழ்லகள் வழங்கினார்.
பின்னர் இவர் பட்டமளிப்பு உரை ஆற்றினார். இதில் அவர் பேசியபோது,
கல்வி அறிவே மகா சக்தியாகும்,இவ்வறிவை சரியான நோக்கத்திற்காக பயன்படுத்த வேண்டும்.உங்கள்,குடும்பம் மற்றும் சமூகத்தின் நலனுக்காக பாடுபட்டு சமுதாயத்திற்கு ஒரு தூண்டுகோலாக இருங்கள். முன்னேற்றத்திற்கான தொழில் திறன்களை வளர்த்துக் கொள்ளுங்கள். தொழில் அல்லது வியாபாரம் மிகுந்த ஆர்வத்துடன் எடுத்துக் கொள்ளுங்கள். வேலைக்கு உங்களை அர்ப்பணிக்கவும் தோல்விக்கு பயப்பட வேண்டாம் என கூறினார்.
முன்னதாக ஸ்ரீ கிருஷ்ணா கல்வி நிறுவனங்களின் அறங்காவலர் கே.ஆதித்யா பட்டமளிப்பு விழாவை துவக்கி வைத்தார். இக்கல்லூரி முதல்வர் டாக்டர் ஜெகஜீவன் வரவேற்ப்பு அளித்து கல்லூரி அறிக்கையை வாசித்தார்.முதன்மை நிர்வாக அதிகாரி டாக்டர்.சுந்தரராமன் , டீன்கள், தேர்வுக் கட்டுப்பாட்டாளர் , பேராசிரியர்கள் மற்றும் பட்டதாரிகள் பலர் கலந்து கொண்டனர். இறுதியாக வணிகவியல் டீன் டாக்டர் மரியா நன்றியுரை வழங்கினார்.