November 2, 2022 தண்டோரா குழு
கோவை ஸ்ரீ கிருஷ்ணா தொழில்நுட்பக் கல்லூரியில் நடைபெற்ற 33 வது பட்டமளிப்பு விழாவில்,சிறப்பு விருந்தினராக மத்திய கல்வி துறை இணை அமைச்சர் சுபாஷ் சர்க்கார் கலந்து கொண்டார்.
கோவை குணியமுத்தூர் பகுதியில் உள்ள ஸ்ரீ கிருஷ்ணா பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரியின் 33 வது பட்டமளிப்பு விழா கல்லூரி வளாகத்தில் அமைந்துள்ள கிருஷ்ணா அரங்கத்தில் நடைபெற்றது.ஸ்ரீ கிருஷ்ணா கல்வி நிறுவனங்களின் தலைவரும் நிர்வாக அறங்காவலருமான எஸ் மலர்விழி பட்டமளிப்பு விழாவில் தலைமை தாங்கினார்.
விழாவில் ஸ்ரீ கிருஷ்ணா கல்வி நிறுவனங்களின் அறங்காவலர் கே ஆதித்யா பங்கேற்று சிறப்பித்தார்.ஸ்ரீ கிருஷ்ணா தொழில்நுட்பக் கல்லூரியின் முதல்வர் டாக்டர் எஸ்.மரகதம் அனைவரையும் வரவேற்று கல்லூரியின் 2020 2021 வருடத்திற்க்கான ஆண்டு அறிக்கையை சமர்ப்பித்தார்.இவ்விழாவில் மத்திய கல்வி இணை அமைச்சர் சுபாஸ் சர்க்கார் தலைமை விருந்தினராக கலந்துக்கொண்டு பட்டமளிப்பு விழா சிறப்புரையாற்றினார்.
இவ்விழாவில் இந்திய தகவல் தொழில்நுட்ப கழகம்,சித்தூரின் இயக்குநர் குழுவின் தலைவரும்,நாஸ்கம் அமைப்பின் ஜி.சி.சி கவுன்சிலின் முன்னாள் தலைவருமான M. பாலசுப்ரமணியம் கௌரவ விருந்தினராக கலந்து கொண்டு சிறப்புரை ஆற்றினர். தொடர்ந்து விழாவில் தலைமை விருந்தினரும், கெளரவ விருந்தினரும் 1037 மாணவ, மாணவிகளுக்கு பட்ட சான்றிதழ்களை வழங்கினர்.
தொடர்ந்து கல்வியில் மிகச்சிறந்து விளங்கிய உயர் மதிப்பெண்கள் பெற்ற 11 மாணவ, மாணவிகள் தலைமை விருந்தினரிடம் வாழ்த்து பெற்றனர்.விழாவில் ஸ்ரீகிருஷ்ணா கல்வி நிறுவனங்களின் முதல்வர்கள், ஸ்ரீ கிருஷ்ணா பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரி மற்றும் ஸ்ரீ கிருஷ்ணா தொழில்நுட்பக் கல்லூரியின் டீன்கள், பல்வேறு துறைகளின் தலைவர்கள் மற்றும் பேராசிரியர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.