• Download mobile app
26 Dec 2024, ThursdayEdition - 3242
FLASH NEWS
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு
  • தமிழ்நாட்டில் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் வெயில் பதிவு!
  • “சந்திரபாபு நாயுடு கூறும் அனைத்துமே கட்டுக்கதைகள்” – ஜெகன் மோகன் ரெட்டி
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

ஸ்ரீ கிருஷ்ணா பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரியில் “ஸ்மார்ட் இந்தியா ஹேக்கத்தான் 2024″ நிகழ்வு துவக்கம்

December 11, 2024 தண்டோரா குழு

மத்திய கல்வி அமைச்சகம் (MoE) மற்றும் அகில இந்திய தொழில்நுட்பக் கல்வி கவுன்சில் (AICTE) இனைந்து நடத்தும் ‘ஸ்மார்ட் இந்தியா ஹேக்கத்தான் (SIH) 2024’ கிராண்ட் பைனல் டிசம்பர் 11 மற்றும் 12 தேதிகளில் கோவை குனியமுத்தூரில் உள்ள ஸ்ரீ கிருஷ்ணா பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரியில் நடைபெற்றது. இக்கல்லூரி இந்தியா முழுவதும் உள்ள 51 நோடல் மையங்களில் ஒன்றாகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது.மேலும் இக்கல்லூரி 5வது முறையாக இதற்காக தேர்ந்தெடுக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது .

ஸ்மார்ட் இந்தியா ஹேக்கத்தான் என்பது 36 மணிநேர இடைவிடாத டிஜிட்டல் தயாரிப்பு மேம்பாட்டுப் போட்டியாகும்,இதில் இந்தியா முழுவதிலும் உள்ள மாணவர்கள் குழுக்களாக மத்திய அமைச்சகம் வழங்கும் சவால்களுக்கு புதுமையான தீர்வுகளை வழங்க போட்டியிடுகின்றனர்.இந்நிகழ்வு 2017ம் ஆண்டு முதல் ஒவ்வொரு வருடமும் இரண்டு வடிவங்களில் நடத்தப்படுகிறது, அதாவது ஸ்மார்ட் இந்தியா ஹேக்கத்தான் மென்பொருள் மற்றும் ஸ்மார்ட் இந்தியா ஹேக்கத்தான் வன்பொருள் பதிப்புகள். ஒவ்வொரு பிரச்சனை அறிக்கைக்களுக்கும் சிறந்த தீர்வினை வழங்கும் அணிக்கு ₹1 லட்சம் ரொக்கப் பரிசு வழங்கப்படவுள்ளது.

120 போட்டியாளர்களை உள்ளடக்கிய 20 அணிகள், கலாச்சார அமைச்சகம், பஞ்சாயத்து ராஜ் அமைச்சகம் மற்றும் டெல்லியின் NCT அரசாங்கத்தால் வழங்கப்பட்ட நான்கு பிரச்சனை அறிக்கைகளுக்கு தீர்வுகாண இக்கல்லூரியில் போட்டியிடுகின்றன.

இந்த ஸ்மார்ட் இந்தியா ஹேக்கத்தான் 2024 கிராண்ட் ஃபைனாலின் துவக்க விழாவை கோயம்புத்தூர் ஸ்ரீ கிருஷ்ணா கல்விக் குழுமங்களின் தலைவர் மற்றும் நிர்வாக அறங்காவலர் எஸ்.மலர்விழி தலைமை தாங்கி துவங்கி வைத்தார்.

இதில் கோவை டாடா கன்சல்டன்சி சர்வீசஸ் டெலிவரி சென்டரின் தலைவர் செல்வகுமார் பாலசுப்ரமணி சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு பேசுகையில்,

இன்றைய இளைஞர்கள் ஆர்வத்துடன் புதுமை கண்டுபிடிப்புகளில் ஈடுபடவேண்டும். புதிய தொழில்நுட்பங்களைக் கற்றுக்கொள்வதற்கான தேவை சமூகத்தின் சவால்களைத் தீர்க்க உதவும். அவர் நமது பிரதமரை அவர்களை மேற்கோள் காட்டி, “ஸ்மார்ட் இந்தியா ஹேக்கத்தான் மூலம், நாட்டின் இளைஞர் சக்தி வளர்ந்த இந்தியாவுக்கான தீர்வுகளின் அமிர்தத்தைப் பிரித்தெடுக்கிறது தருகிறது” என்று கூறினார். பங்கேற்பாளர்கள் தங்களுக்குரிய பிரச்சனை அறிக்கைகளில் தங்களால் இயன்றதை வழங்குமாறும், மனிதகுல மேம்பாட்டிற்க்கு புதுமையான டிஜிட்டல் தீர்வுகளை வழங்குவதே சிறந்த தீர்வு என்றும் ஊக்குவித்தார்.

இந்நிகழ்ச்சியில் ஆர்விஎஸ் கல்வி நிறுவனங்களின் நிர்வாக அறங்காவலர் டாக்டர் கே.செந்தில் கணேஷ் கௌரவ விருந்தினராக கலந்து கொண்டார். மேலும் ஆகன்ஷா ஷெஜல் மற்றும் வைஷ்ணவி கெய்க்வாட், புனேவைச் சேர்ந்த நோடல் மையத் தலைவர்கள், தனகோட்டி.எஸ், UI/UX வழிகாட்டி, கொல்கத்தா தேசிய அறிவியல் அருங்காட்சியகக் குழுவைச் சேர்ந்த அர்னாப் சாட்டர்ஜி மற்றும் பாட்னாவில் உள்ள தேசிய அறிவியல் அருங்காட்சியகக் குழுவைச் சேர்ந்த கிருஷேந்து சவுத்ரி, இக்கல்விக்குழுமங்களின் தலைமை நிர்வாக அதிகாரி சுந்தரராமன், முதல்வர் பொற்குமாரன் மற்றும் டீன் இன்னோவேஷன்ஸ் பி.அசோக வர்த்தனன் ஆகியோர் பங்கேற்றனர்.

போட்டியாளர்களை ஊக்குவிக்கும் வகையில், மாண்புமிகு பாரதப் பிரதமர் நரேந்திர மோடி வீடியோ கான்பரன்சிங் மூலம் இக்கல்லூரியில் போட்டியாளர்களுடன் உரையாடுகிறார்.

மேலும் ஸ்ரீ கிருஷ்ணா பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரியின் 17 மாணவ அணிகள் ஸ்மார்ட் இந்தியா ஹேக்கத்தான் (SIH) 2024 மென்பொருள் மற்றும் வன்பொருள் பதிப்புகளின் இறுதிப் போட்டியில் மற்ற நோடல் மையங்களில் பங்கேற்றுள்ளனர்.

மேலும் படிக்க