September 13, 2024 தண்டோரா குழு
கோயம்புத்தூர் க.க சாவடியில் அமைந்துள்ள ஸ்ரீ நாராயண குரு கல்லூரியின் பேராசிரியர்கள் மற்றும் மாணவர்கள் இன்று கேரள மக்களை விட ஓணம் பண்டிகையை கோலாகலமாக கொண்டாடினர். கல்லூரி முதல்வர் D.கல்பனா வரவேற்று பேசினார்.
நிகழ்ச்சிக்கு ஸ்ரீ நாராயண குரு கல்வி அறக்கட்டளை செயலாளர் P.A.ராஜ்குமார் தலைமை வகித்தார்.ஸ்ரீ நாராயண குரு கல்வி அறக்கட்டளையின் பொருளாளர் பி.வி.சஜீஷ்குமார் வாழ்த்துரை வழங்கினார்.
சிறப்பு விருந்தினராக,கைரளி கல்ச்சுரல் அகாடமியின் பொதுச்செயலாளர் ஏ.கே. ஜனார்தனன் மாணவர்களிடையே உரையாற்றினார்.அப்போது,”ஓணம் ஒரு தனித்துவமான பண்டிகை மற்றும் இது கேரள மாநிலத்தின் வளமான கலாச்சாரம் மற்றும் வரலாற்றைக் காட்டுகிறது”. “உங்கள் வாழ்வு மகிழ்ச்சி, செழிப்பு மற்றும் வெற்றிகளால் நிரப்பப்பட வேண்டும் என்று மாணவர்களுக்கு ஓணம் செய்தி” என்று சிறப்பு விருந்தினர் கூறினார்.
ஸ்ரீ நாராயண குரு கல்லூரி மாணவ, மாணவிகள் அத்தப்பூக்கோலம், திருவாதிரை நடனம், சிங்காரி மேளம், தாம்போலம், பூக்காவடி, ஓணம் சத்யா, வடம்வலி மற்றும் கலாசார நிகழ்ச்சிகளுடன் ஓணம் பண்டிகையை கொண்டாடி மகிழ்ந்தனர்.
தொடர்ந்து, கல்லூரி முதல்வர் D.கல்பனா, பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகளை வழங்கினார். மாணவர்களின் நுண்கலைக்குழு செயலாளர் ஆல்பின் பிஜு நன்றியுரையாற்றினார்.