• Download mobile app
25 Nov 2024, MondayEdition - 3211
FLASH NEWS
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு
  • தமிழ்நாட்டில் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் வெயில் பதிவு!
  • “சந்திரபாபு நாயுடு கூறும் அனைத்துமே கட்டுக்கதைகள்” – ஜெகன் மோகன் ரெட்டி
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை அறிவியல் கல்லூரியில் பொங்கல் விழா

January 12, 2023 தண்டோரா குழு

ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை அறிவியல் கல்லூரியில் பொங்கல் விழா கோலாகலமாகக் கொண்டாடப்பட்டது.

தமிழ்நாட்டின் பாரம்பரிய பொங்கல் பண்டிகை, உலகம் முழுவதும் வாழும் தமிழர்களால் வரும் 15-ம் தேதி வெகுவிமரிசையாகக் கொண்டாடப்பட உள்ளது. இதை முன்னிட்டு கோவை நவ இந்தியாவில் உள்ள ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் இன்று (ஜனவரி 12) பொங்கல் விழா கொண்டாடப்பட்டது.

இதற்காகக் கல்லூரி வளாகமே விழாக்கோலம் பூண்டிருந்தது.வாழை மரங்கள், தென்னங்கீற்று, பனைவோலை,பல வண்ணப்பூக்கள் அலங்காரத்துடன் காணப்பட்டது.கொண்டாட்ட மனதுடன் மாணவ, மாணவிகள் பாரம்பரிய உடையணிந்து கல்லூரிக்கு வந்தனர். பின்னர் பொங்கல் பாரம்பரியத்தைப் போற்றும் வகையில் மாணவிகளுக்கு இடையே பல்வேறு போட்டிகள் நடத்தப்பட்டன. மாணவ,பொங்கல் என்றவுடன் நினைவுக்கு வருவது தித்திக்கும் பொங்கல் அல்லவா? இதற்காக நடத்தப்பட்ட போட்டியில், மாணவர்களும், மாணவிகளும் சிறு, சிறு குழுக்களாக இணைந்து பொங்கல் வைத்து அசத்தினர்.

கிராம வாழ்வியல் சூழலை இன்றைய இளம் தலைமுறையினருக்குக் கொண்டுச் செல்லும் வகையில் கிராமரிய ஆடை அலங்காரப் போட்டி நடத்தப்பட்டது. அதில் கிராம மக்களைப் போலவே தோற்றமளித்த மாணவர்கள் ‘அழகிய தமிழ்மகன்’களாகவும் மாணவிகள் ‘அழகிய தமிழ்மகள்’களாகவும் தேர்வு செய்யப்பட்டனர். உரலில் அரிசி குத்துதல், அம்மியில் அரைத்தல், பூக்கட்டுதல், மருதாணி வைத்தல், கோலம் போடுதல், கைவினைப் பொருட்கள் செய்தல், மெதுவாக மிதிவண்டி ஓட்டும் பந்தயம், சக்கர வண்டி ஓட்டுதல்,நொண்டியடித்தல், பல்லாங்குழி, ஐந்துகல் ஆட்டம், கோலி குண்டு. விளையாடுதல் போன்றவற்றையே பார்த்திராத பல மாணவர்களுக்கு, அவற்றைக் காண்பித்தது மட்டுமின்றி, அதை என்னாறு செய்வது? என்ற அனுபவமும் அளிக்கப்பட்டது.

கிராமப்புற பெண்களைப் போல் ஆடை அலங்காரம் செய்து கொண்டு, உரலில் நெல் குத்துதல், முறத்தில் புடைத்தல் என மாணவிகள் தங்களது திறமைகளை வெளிப்படுத்தினர். அம்பியில் மஞ்சள் அரைத்தும், பூக்கட்டியும், கைவினைப் பொருட்கள் செய்தும் மாணவர்கள் அசத்தினர். சக்கர வண்டி ஓட்டியும், நொண்டியடித்து விளையாடியும், பல்லாங்குழி விளையாடியும், ஐந்து கல் ஆடியும், கோலி குண்டு விளையாடியும் வெற்றி வாகை சூடினர்.

அதைத் தொடர்ந்து நாட்டுப்புற நடனம், சிலம்பாட்டம், ஒயிலாட்டம் ஆகிய நிகழ்ச்சிகள் நடைபெற்றன.நிறைவாக பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு, ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரி முதல்வர் மற்றும் செயலர் முனைவர் பி.எல்.சிவக்குமார் பரிசுகள் வழங்கினார். இதற்கான ஏற்பாடுகளை கல்லூரி பேராசிரியர்கள் மற்றும் மாணவ, மாணவிகள் செய்திருந்தனர்.

மேலும் படிக்க