• Download mobile app
22 Nov 2024, FridayEdition - 3208
FLASH NEWS
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு
  • தமிழ்நாட்டில் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் வெயில் பதிவு!
  • “சந்திரபாபு நாயுடு கூறும் அனைத்துமே கட்டுக்கதைகள்” – ஜெகன் மோகன் ரெட்டி
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை அறிவியல் கல்லூரி சார்பில் கோவையில் தூய்மை இந்தியா விழிப்புணர்வு நிகழ்ச்சி

September 28, 2024 தண்டோரா குழு

ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரி (SRCAS) மத்திய அரசின் ஸ்வச்சதா ஹி சேவா 2024 விழிப்புணர்வு பிரச்சாரத்தை கோவை ரேஸ் கோர்ஸ் சாலையில் தாமஸ் பார்க்கில் நடத்தியது.

இந்த பிரச்சாரம் தூய்மையை மேம்படுத்துதல் மற்றும் தூய்மை முயற்சிகளில் பங்கேற்பதில் கவனம் செலுத்துகிறது. இந்த பிரச்சாரம் முதன்முதலில் மத்திய அரசால் 2017 இல் ஸ்வச் பாரத் மிஷனின் கீழ் தொடங்கப்பட்டது, இது ஆண்டுதோறும் செப்டம்பர் 17 முதல் அக்டோபர் 2 வரை அனுசரிக்கப்படுகிறது.

கல்லூரியின் என்.எஸ்.எஸ் பிரிவைச் சேர்ந்த 600 க்கும் மேற்பட்ட மாணவர்கள் , மனித சங்கிலி, நடனம் மூலம் தூய்மை குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தினர். மேலும், தங்கள் இடங்களையும், சுற்றுப்புறங்களையும் தூய்மையாக வைத்திருப்பதாகவும், குப்பை கொட்ட மாட்டோம் என்றும் உறுதிமொழி ஏற்றனர்.

இந்த நிகழ்ச்சியின் சிறப்பு விருந்தினராக கோவை வடக்கு சட்டம் மற்றும் ஒழுங்கு துணை ஆணையர் ஸ்டாலின் ஐபிஎஸ் கலந்து கொண்டார்.

எஸ்.என்.ஆர் சன்ஸ் அறக்கட்டளையின் இணை நிர்வாக அறங்காவலர் ஆர்.சுந்தர் முன்னிலை வகித்தார். NSS சென்னையின் மண்டல இயக்குநரகம், பாண்டிச்சேரி, அந்தமான் & நிக்கோபார் பிராந்திய இயக்குனர் C. சாமுவேல் செல்லையா , பாரதியார் பல்கலைக்கழகத்தின் என்எஸ்எஸ் ஒருங்கிணைப்பாளர் அண்ணாதுரை, கல்லூரி முதல்வர் சிவக்குமார், எஸ்ஆர்சிஏஎஸ் ,என்எஸ்எஸ் திட்ட அலுவலர் பிரகதீஸ்வரன் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

நிகழ்ச்சியில் பேசிய ஆர்.சுந்தர், தூய்மை என்பது ஒரு வார்த்தை அல்ல, ஒரு மந்திரம், நாம் அனைவரும் நமது இடங்களையும் சுற்றுப்புறங்களையும் நேர்த்தியாக வைத்திருக்க முயற்சிக்க வேண்டும் என்றார். தனிப்பட்ட மற்றும் பொது இடங்களை சுத்தமாக பராமரிப்பது ஒரு சமூகத்தின் வளர்ச்சியின் தெளிவான அறிகுறியாகும் என்று அவர் தெரிவித்தார்.

கோவை வடக்கு சட்டம் மற்றும் ஒழுங்கு துணை ஆணையர் ஸ்டாலின் ஐபிஎஸ் அவர்கள், ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரி மேற்கொண்ட இந்த முயற்சியை பாராட்டினார். “இளைஞர்கள் தூய்மைப் பணிகளில் ஈடுபடும் போது, ​​அதைப் பார்க்கும் பொதுமக்களின் மனதிலும் இதயத்திலும் மாற்றத்தை உருவாக்கும்” என்று அவர் கருத்து தெரிவித்து, மாணவர்களின் சுறுசுறுப்பான பங்கேற்பிற்கு வாழ்த்து தெரிவித்தார்.

மேலும் படிக்க