• Download mobile app
29 Apr 2025, TuesdayEdition - 3366
FLASH NEWS
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு
  • தமிழ்நாட்டில் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் வெயில் பதிவு!
  • “சந்திரபாபு நாயுடு கூறும் அனைத்துமே கட்டுக்கதைகள்” – ஜெகன் மோகன் ரெட்டி
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனையில் நியூரோ ஈக்விலி பிரியம் (தலைசுற்றல்) கிளினிக் தொடக்கம்

March 4, 2022 தண்டோரா குழு

ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனையில் நியூரோ ஈக்விலி பிரியம் (தலைசுற்றல்) கிளினிக் தொடக்கவிழா நடந்தது.

கோவையில் முதல் முறையாக ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனையில் தலைசுற்றல் நரம்பியல் தொடர்பான அதிநவீன சிகிச்சை மையம் ஒன்று தொடங்கப்பட்டுள்ளது. அதற்கு ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனையில் ஈக்விலிபிரியம் கிளினிக் தொடக்க விழா நடைபெற்றது.

தொடக்க விழாவிற்கு எஸ்.என்.ஆர்.சன்ஸ் அறக்கட்டளை நிர்வாக அறங்காவலர் லட்சுமி நாராயணசாமி தலைமை வைத்த மையத்தை திறந்து வைத்தார்.கோவை ஆவாரம்பாளையம் உள்ள ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை பல்வேறு அதிநவீன சிகிச்சை பிரிவுகளில் மேலும் ஒன்றாக நியூரோ ஈக்விலிபிரியம் நிறுவனத்துடன் இணைந்து நீரோ ஈக்விலிபிரியம் கிளினிக் என்ற தலைசுற்றல் நரம்பு தொடர்பான அதிநவீன சிகிச்சை மையம் ஏற்படுத்தப்பட்டுள்ளது.

இது கோவையின் முதல் பல்நோக்கு சிகிச்சை மையமாகும்.தலைசுற்றல் பிரச்சனையால் நோயாளிகள் நிலை தடுமாறும் பாதிப்பை கண்டறிந்து,தெரபிகள் மூலமாக மறுசீரமைப்பு செய்து தீர்வு காண செய்வது மையத்தின் நோக்கமாகும்.தலைசுற்றல் நம்முடைய வாழ்க்கை சூழலை பொறுத்து ஏற்படுகின்ற பிரச்சினை ஆகும்.இதை எல்லோரும் எளிதாக உணரமுடியும். இது அன்றாட வாழ்க்கைக்கு பாதிப்பை ஏற்படுத்தும் மிகப்பெரிய சவாலாக இருக்கும்.

இந்திய மக்கள் தொகையில் 15% பேர் தலை சுற்றல் பிரச்சனையால் நிலை தடுமாற பாதிப்பு உள்ளதாக புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன.
குறிப்பிட்ட பிரிவினருக்கு மட்டும் பாதிப்பு ஏற்படுவதில்லை.அனைத்து வயதினருக்கும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.இம்மையத்தில் நோயாளிகளுக்கு தலைசுற்றல் ஏற்படுவதற்கான காரணங்கள் அதிநவீன தொழில்நுட்பங்களை பயன்படுத்தி,பரிசோதனை மூலமாக மிகவும் துல்லியமாகவும் தலைசிறந்த மருத்துவர்களால் கண்டறியப்பட்டு சிகிச்சை அளிக்கப்படுகிறது.

விழாவில் எஸ்.என்.ஆர்.சன்ஸ் அறக்கட்டளை அறங்காவலர் நிர்வாக அறங்காவலர் ஆர்.சுந்தர் முதன்மை செயல் அலுவலர் சுவாதி ரோஹித்,ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை மற்றும் மருத்துவ இயக்குனர் டாக்டர் பி.சுகுமாரன், தலைமைச் செயலாளர் அலுவலர் சி.வ.ராம்குமார்,
நியூரோ ஈக்விலிபிரியம் நிறுவன நிர்வாக இயக்குனர் ரஜனீஷ் பண்டாரி, மருத்துவ இயக்குனர் டாக்டர் அனிதா பண்டாரி மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

மேலும் படிக்க