March 19, 2025
தண்டோரா குழு
ஹெச்ஏபி டெய்லி, ஹட்சன் அக்ரோ நிறுவனத்தின் சில்லறை வணிக விரிவாக்கத் திட்டத்தின் ஒரு பகுதியாகும். இவை அருண் ஐஸ்கிரீம்ஸ், ஆரோக்யா, ஹட்சன், மற்றும் ஹனோபார் போன்ற பிராண்டுகளின் பல்வேறு தயாரிப்புகளை வழங்குகின்றன.
ஹெச்ஏபி டெய்லி–ல் ஐஸ்கிரீம்கள், பால், தயிர்,மோர்,பனீர்,தயிர் வகைகள், பழச்சாறு, சாக்லேட்,வெண்ணெய் மற்றும் பலவற்றை நுகர்வோருக்கு நேரடியாக விற்பனை செய்வதோடு,அருகிலுள்ள சில்லறை கடைகளுக்கும் விநியோக சேவைகளை வழங்கி, தயாரிப்புகளை கிடைக்கும் வாய்ப்பை அதிகரித்து, பிராண்டின் அணுகுமுறையை விரிவுபடுத்துகின்றன.
4000-வது ஹெச்ஏபி டெய்லி திறப்பு விழா முன்னிட்டு ஹட்சன் அக்ரோ புராடக்ட் லிமிடெட் சேர்மேன் சந்திரமோகன் கூறியதாவது:
“ஆந்திர பிரதேசம், பீமாவரத்தில் எங்களின் 4000-வது ஹெச்ஏபி டெய்லி எக்ஸ்க்ளூஸிவ் ஸ்டோர் திறப்பு விழா, வாடிக்கையாளர்களுக்கு அவர்களது அருகாமையிலேயே ஃப்ரஷ்ஷான, உயர் தரமிக்க டெய்ரி புராடக்டுகளை கொண்டு வந்து சேர்க்கும் கம்பெனியின் பயணத்தில் முக்கியமானதோர் சாதனையை குறிக்கிறது. ஹட்சன் அக்ரோ எப்போதும், புதுமை படைப்புகள், உயரிய தரம் ஆகியவற்றின் மீது கவனம் செலுத்தி அதன் மூலம் புராடக்ட்டுகள் வாடிக்கையாளர்களுக்கு எளிதாக கிடைக்கச் செய்வதோடு பால் பண்ணை விவசாயிகள் மற்றும் பிரான்ச்சைஸீ பார்ட்னர்களுக்கும் பல புதிய வாய்ப்புகளை ஏற்படுத்தித் தருகிறது.
எங்கள் செயல்பாடுகளை நாங்கள் தொடர்ந்து விரிவுபடுத்தி, எங்கள் டிஸ்ட்ரிபியூஷன் நெட்வொர்க்கை வலுப்படுத்தி அதன் மூலமாக அதிநவீன ரீடெய்ல் ஃபார்மேட்டுகள் வாயிலாக வாடிக்கையாளர்களுக்கு மனநிறைவான அனுபவங்களை மேம்படுத்தச் செய்வது எங்கள் குறிக்கோளாக இருந்து வருகிறது.” சந்தை வரம்பை மேலும் அதிகரிக்க, ஹட்சன் அக்ரோ சமீபத்தில் பால் மற்றும் ஐஸ்கிரீம் தயாரிப்புகளுக்கான வளர்ந்து வரும் தேவையை பூர்த்தி செய்ய, முக்கிய சந்தைகளில் விநியோக வலையமைப்பை வலுப்படுத்தவும், மற்றும் புதிய மதிப்பு கூட்டப்பட்ட பால் பொருட்கள் தயாரிப்பு இலாகாவை அதிகரிக்க, செயலாக்க திறன்களை விரிவு படுத்துவதற்கான வழிவகைகள் செய்துள்ளது.
ஹட்சன் ஆக்ரோவின் முன்னணி பிராண்டான அருண் ஐஸ்கிரீம்ஸ், தினசரி ஹெச்ஏபி டெய்லி மூலம் இந்தியா முழுவதும் விநியோகிக்கப்படுகிறது மற்றும் 6 (சிங்கப்பூர், செஷெல்ஸ், மாலத்தீவு, புரூணை, ஐக்கிய அரபு எமிரேட்சு – அஜ்மான், & மொரிஷியஸ்) நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படுகிறது, மேலும் அதன் உலகளாவிய விரிவைப் பலப்படுத்துகிறது.”ஹட்சன் அக்ரோ, தனது சில்லறை வணிகப் பரப்பை அதிகரிக்க மற்றும் புதிய சந்தைகளில் தொடர்ந்து விரிவுசெய்து வருகிறது.
இதன் ஒரு பகுதியாக, மகாராஷ்டிரா, மத்திய பிரதேசம், கேரளா, மேற்கு வங்காளம், ஒடிசா, பீஹார், சட்டீஸ்கர், ஜார்கண்ட், குஜராத் மற்றும் அந்தமான் & நிக்கோபார் தீவுகளில் புதிய ஹெச்ஏபி டெய்லி ஸ்டோர்கள் தொடங்க திட்டமிடப்பட்டுள்ளது. அதேசமயம், தமிழ்நாடு, கர்நாடகா, ஆந்திரப் பிரதேசம், தெலுங்கானா, புதுச்சேரி மற்றும் கோவாவில் மேலும் வலுப்படுத்தி வருகிறது.