April 13, 2017 indiatoday.intoday.in
உத்தர பிரதேசம் மாநிலத்தில் பெண்களுக்கு எதிராக எழும்பும் குற்றங்களை தடுக்க ‘ஆண்டி ரோமியோ’ அமைப்பு தொடங்கப்பட்டது. அதே போல் ஹரியான மாநிலத்தில் ‘ஆபரேஷன் துர்கா’ என்னும் பெயரில் புதிய அமைப்பு தொடங்கப்பட்டுள்ளது.
உத்தர பிரதேசம் மாநிலதின் முதலமைச்சராக யோகி ஆதித்யநாத் பதவியேற்றார். பெண்களுக்கு எதிராக நடக்கும் குற்றங்களை குறைக்க அங்குள்ள அனைத்து மாவட்டத்திலும் ‘ஆண்டி ரோமியோ’ அமைப்பு தொடங்கி வைத்தார். அவரை பின்தொடர்ந்து ஹரியான மாநில முதலமைச்சர் மனோகர் லால் கட்டார் ‘ஆபரேஷன் துர்கா’ என்னும் அமைப்பை ஏப்ரல் 12ல் தொடங்கி வைத்தார்.
ஹரியான மாநிலம் முழுவதிலும் 24 ‘ஆபரேஷன் துர்கா’ அமைப்பு உள்ளது. 14 உதவியாளர் துணை இன்ஸ்பெக்டர்கள், 6 தலைமை காவலர்கள், 13 காவலர்கள், மற்றும் காவல்துறை அதிகாரிகள் அந்த அமைப்பில் உள்ளனர்.
பள்ளிகள், கல்லூரிகள், போக்குவரத்து நிலையங்கள், ரயில் நிலையங்கள், ஆகிய இடங்களில் தகாத வார்த்தைகளால் பெண்களை கிண்டல் செய்து, அவர்களை பின் தொடர்ந்து சென்று கேலி செய்த 72 ஆண்களை அந்த அமைப்பு தொடங்கிய முதல் நாளில் கைதுசெய்து செய்யப்பட்டனர். மேலும், பெண்களுக்கு பாதுகாப்பு தரவும் அவர்களுடைய புகார்களை ஏற்றுக்கொண்டு செயல்படவும் ஹரியானவில் உள்ள எல்லா மாவட்டத்திலும் மகளிர் காவல் நிலையங்கள் திறந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.