May 12, 2016 தண்டோரா குழு
காதலியைக் காயப்படுத்த அவளது செல்ல நாயை, ஹிட்லர் சல்யூட் அடிக்கச் சொல்லி துன்புறுத்திய ஸ்காட்லாந்து நபரை லண்கஷிர் காவல் துறையினர் கைது செய்தனர்.
ஸ்காட்லாந்தை சேர்ந்தவர் மார்சாஸ் மீச்சென். இவரது காதலி புத்தா என்ற ஒரு பக் இன நாயைச் செல்ல பிராணியாக வளர்த்து வந்தார். தனது காதலனுடன் நேரம் செலவழிக்கும் போது எப்பொழுது பார்த்தாலும் தனது செல்ல நாயிகுட்டி பற்றி பெருமை பேசுவதை வாடிக்கையாகக் கொண்டிருந்தார்.
அதன் துருதுருப்பு, அழகு என்று ஒரு பட்டியலே வாசித்து விடுவார். தனது காதலி எந்த நேரத்திலும் ஒரு நாயைப் பற்றி பெருமை பேசுவதை பொறுத்துக் கொள்ள முடியாமல், அதற்கு ஒரு முற்றுப் புள்ளி வைக்கத் தீர்மானித்தார் காதலன்.
இன்றளவில், உலகத்தாரின் அதிகபட்ச வெறுப்பைப் பெற்றவர் ஹிட்லர். ஆறு கோடி யூத இன மக்களை ஈவு இறக்கமின்றி கொன்று குவித்தவர். ஒரு மனிதனை மிகக் கொடூரமானவனாக சித்தரிக்க வேண்டுமானால் அவனை ஹிட்லருடன் உருவகப்படுத்திப் பேசுவது வழக்கம். இதனை
மனதில் கொண்டு, தனது காதலியின் பெருமைக் குரிய அந்த நாய்க் குட்டியை ஒரு வெறுப்பின் சின்னமாக இருக்கும் ஹிட்லருடன் சம்பத்தப்படுத்தி ஒரு வீடியோ தயாரித்தார்.
அதற்காக, அந்த பக் நாய்க்குட்டிக்கு ஹிட்லரின் பெயர் போன ‘நாசி சல்யூட்’ அடிக்க கற்றுக் கொடுத்தார். எப்போதெல்லாம் "Sieg Heil" என்று மீச்சென் கட்டளையிடுகிறாரோ, அப்போது
தனது முன் கைகளை தலைக்கு மேலாக நீட்டி தனது ‘நாசி சல்யூட்டை’ செய்து காண்பிக்கும். அவ்வாறு அது செய்வதை வீடியோ பதிவு செய்து யூ டியுபிலும் வெளியிட்டார். இவ்வாறு செய்வதால், அந்த அழகிய செல்ல நாயிகுட்டி ஒரு வெறுப்பின் சின்னமாக மாறியதாகவும், அது தனக்கு ஆறுதலாகவும் உள்ளது என்றும் மீசென் தெரிவித்தார்.
யூ டியுபில், இதனைக் கண்ட பலர் அந்த நாய் பற்றி கேலி பேசுவது தனக்கு மிகவும் பிடித்ததாகவும் தெரிவித்தார்.
இதனைக் குறித்து ஸ்காட்லாந்து நாட்டின் யூத இன மக்களின் செய்தி தொடர்பாளர் யூதர்களுக்கு ஏற்பட்ட அந்தக் கொடுமையை ஒரு கேலி பொருளாகச் சித்தரிக்க பயன்படுத்துவது மிகவும்
வேதனை அளிப்பதாவும், இது கடும் கண்டனத்துக்கு உரியது என்றும் தெரிவித்தார். மேலும் மேலும் எதிர்ப்புகள் வலுக்கவே, ஸ்காட்லாந்து காவல் துறை மீச்சென்னை கைது செய்துள்ளனர். ஆனால் மீச்ன்னோ, நான் இதை ஒரு விளையாட்டாகத்தான் செய்தேன், யாரையும் புண் படுத்த அல்ல என்று கூறுகிறார்.
எது எப்பிடியோ ஹிட்லரின் கொடுமைகள் மக்களின் மனதை எந்தளவிற்குப் புண்படுத்தியுள்ளது என்பதற்கு இது ஒரு சான்று.