May 5, 2017 தண்டோரா குழு
உத்தரபிரதேஷ மாநிலத்தில், ஹிந்தி வார்த்தைகளை சரியாக எழுதாத காரணத்தால், தனக்கு கிடைத்த வரனை வேண்டாம் என்று பெண் ஒருவர் மறுத்துள்ளார்.
உத்தரபிரதேஷ மாநிலத்தின் மைன்புரி என்னும் இடத்தில் வசிக்கும் ஒரு பெண்ணுக்கு அவளுடைய பெற்றோர் மாப்பிளை பார்த்து வந்தனர். அந்த பெண் 5ம் வகுப்பை வரை தான் படித்துள்ளாள். அதே மாநிலத்தின் பாரக்காபாத் என்னும் இடத்தில் வசிக்கும் ஒரு வரன் அவர்களுக்கு கிடைத்தது. அவன் 12ம் வகுப்பு வரை படித்துள்ளான். மாப்பிளையின் வீட்டார், முறைப்படி பெண் பார்க்க வருவதாக தெரிவித்தனர்.
அதன்படி, இரு வீட்டாரும் சந்தித்து பேசினர். பெண்ணை பார்த்த அவன், பெண்ணிடம் பேச வேண்டும் என்று கூறியுள்ளான். இதற்கு இருவீட்டு பெற்றோர்களும் சம்மதம் தெரிவித்துள்ளனர். அந்த பெண்ணிடம் ஒரு டைரியை கொடுத்து, தான் கூறும் சில வார்ததைகளை எழுதுமாறு கூறியுள்ளான். அந்த பெண், அவன் கூறிய வார்த்தைகளை எழுதியுள்ளாள். அனைத்து வார்த்தைகளையும் சரியாக எழுதியுள்ளாள் என்று , அந்த பெண்ணை திருமணம் செய்துக்கொள்ள சம்மதம் தெரிவித்தான்.
சிறிது நேரம் கழித்து, தான் சொல்லும் வார்த்தைகளையும், அவனுடைய முகவரியையும் எழுத வேண்டும் என்று அந்த பெண் கூறியுள்ளாள். அதன் படி, அவள் கூறிய வார்த்தைகளையும், முகவரியையும் எழுதி அந்த பெண்ணிடம் காட்டியுள்ளான். அவன் எழுதிய வார்த்தைகள் அனைத்திலும் எழுத்துப்பிழைகள் இருந்ததால், அவனை திருமண செய்துக்கொள்ள விருப்பமில்லை என்று கூறிவிட்டாள்.
குடும்பத்தினரும் உறவினர்களும் அவளை சம்மதிக்க வைக்க முயன்றும், தனது முடிவில் உறுதியாக இருந்தாள். மாப்பிளை வீட்டாரும் தங்கள் வந்த வழியை பார்த்து வருத்ததுடன் திரும்பி சென்று விட்டனர்.