December 7, 2024
தண்டோரா குழு
கோவை மாநகர் குனியமுத்தூர் காவல் நிலையம் எல்லைக்குட்பட்ட ஹில்வியூ ரெசிடன்சியல் பகுதி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தும் பணி முடிவுற்று கண்காணிப்பு அறை திறப்பு விழா நடைபெற்றது.
கோவைப்புதூர் ஹில்வியூ ரெசிடன்சியல் பகுதிகளில் ஹில்வியூ அசோசியேசன் பங்களிப்புடன் 15 கேமராக்கள் பொருத்தப்பட்டு கண்காணிப்பு கேமரா அறையினை பொதுமக்கள் பாதுகாப்பிற்காக கோவை மாநகர காவல் ஆணையர் பாலகிருஷ்ணன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு திறந்து வைத்தார். தற்போது 15 கேமராக்களும் முன்னதாக டி4 காவல்நிலையம் எல்லைக்குட்பட்ட பகுதிகளில் 600கும் மேற்பட்ட கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன என்று காவல்நிலையம் சார்பில் தெரிவிக்கப்பட்டது.
இந்நிகழ்ச்சியில் துணை ஆணையாளர் சரவணகுமார்,தெற்கு உதவி ஆணையாளர் அஜய் தங்கம்,டி4 காவல் ஆய்வாளர் பாஸ்கர்,உதவி ஆய்வாளர் மரகதம்பாள், தலைமைகாவலர்கள் முத்துசாமி , ஆறுமுகம், ஈஸ்வரன் மற்றும் காவலர்கள் , ஹில்வியூ அசோசியேசன் நிர்வாகிகள், அப்பகுதி பொதுமக்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.மாநகர் காவல் ஆனையர் பாலகிருஷ்ணன் பத்திரிகையாளர்களிடம் கூறுகையில் கோவை மாநகரில் 25000 கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன இதன் மூலமாக குற்றங்கள் குறைந்துள்ளது.
மேலும் குற்றவாளிகளை உடனடியாக பிடிப்பதற்கு மிகவும் உதவியாக உள்ளது. குறிப்பாக பெண்களுக்கு எதிரான குற்றங்கள் மிகவும் குறைந்து பெண்கள் பாதுகாப்பான பயனத்தை தொடர உதவியாக உள்ளது. மேலும் 140 தனியார் பேருந்துகளில் கேமராக்கள் பொருத்தப்பட்டு சரியாக செயல்படுகிறதா என்று ஆய்வு செய்து உறுதிபடுத்தியுள்ளோம்.மேலும் சில நாட்களில் மீதமுள்ள தனியார் பேருந்துகளில் கேமராக்கள் பொருத்தப்படும்.
போதைபுழக்கதிற்கு பல்வேறு தடுப்பு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன. சமீபத்தில் கரும்புக்கடை மற்றும் சரவனம்பட்டி பகுதிகளில் தகவலின் பேரில் போதை மாத்திரை விற்றவர்களை கைது செய்துள்ளோம். மேலும் 83 கல்லூரிகளில் போதைக்கு எதிரான கிளப்புகள் தொடங்கப்பட்டு மாணவர்களுக்கு விழிப்புணர்வுகள் ஏற்படுத்தி வருகிறோம்.
போலிஸ் அக்கா திட்டத்தின் மூலம் இரண்டு வருடங்களில் 600 கும் மேற்பட்ட புகார்கள் வந்துள்ளன. கடந்த அக்டோபர் மாதத்தில் 60 புகார்வந்துள்ளன. போலிஸ் அக்கா திட்டம் கல்லூரி பெண்கள் மத்தியில் மிகவும் பயனுள்ளதாக உள்ளது என்று கூறினார்.