November 12, 2021 தண்டோரா குழு
ஒருமுறை வீட்டு உள் அலங்காரத்தில் தேர்வு பெற்ற ஹோம்லேன் கம்பெனி, தனது விரிவாக்க நடவடிக்கையாக கோவையில் தனது முதலாவது அனுபவ மையத்தை துவக்கியுள்ளது.
தமிழ்நாட்டிலும் சேர்த்து நாடு முழுவதும் உள்ள இரண்டாம் நிலை நகரங்களில் இந்த மையத்தை துவக்குகிறது. கோவையில் இந்த மையத்தை இரண்டு கோடி ரூபாய் செலவில் அமைத்துள்ளது.அடுத்த 2023ம் நிதியாண்டிற்குள் 75 கோடி ருபாய் வணிக வருவாய் ஈட்டும் என எதிர்பார்க்கப்படுகிறது.மேலும் இந்த கம்பெனி, அடுத்த ஆறு மாதங்களில் திருப்பூர், ஈரோடு உள்ளிட்ட பகுதிகளில் தனது விரிவாக்க நடவடிக்கையாக 50 – 60 லட்ச ருபாய் முதலீடு செய்ய திட்டமிட்டுள்ளது.
கோவையில் 2500 சதுரடியில் அமைந்துள்ள ஹோம்லேன் அனுபவ மையம், வாடிக்கையாளர்கள் பலவிதமான வீட்டு அமைப்புகள், வடிவமைப்புகள் உள்ளிட்டவைகளை நிபுணத்துவம் கொண்டவர்களைக் கொண்டு உருவாக்கி, வழங்குகிறது. கோவையின் மையப்பகுதியாக இருக்கும், அவிநாசி ரோடு, லட்சுமி மில் சந்திப்பில் அமைந்துள்ளது.
கோவையில் அடுக்குமாடி குடியிருப்பு கலாச்சாரம் மெதுவாக வரத்துவங்கினாலும், பெரும்பாலான வீட்டு உரிமையாளர்கள், பெரிய வீடுகளாக கட்ட திட்டமிடுகின்றனர். சந்தையில் ஒருங்கிணைந்த பணிகளை மேற்கொள்பவர்களையும், விரும்பிய வகையில் அமைக்கவும், அதிக செலவில்லாத வகையில் அலங்காரங்களை மேற்கொள்ளவும், குறிப்பிட்ட காலத்தில் முடிக்க வேண்டும் என்பதிலும் கவனம் செலுத்துகின்றனர். ஹோம்லேன், வெளிப்படையாகவும், வாடிக்கையாளர்கள் அனுபவமாக கண்டறியும் வகையிலும் அiமைத்திருப்பதால், நகரில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.
ஹோம்லேன் இணை நிறுவனர் மற்றும் தலைமை செயல் அதிகாரியுமான தனுஜ் சவுத்ரி,
“கோவையில் தடம் பதிப்பதில் பெரும் மகிழ்ச்சியும் பரபரப்பும் அடைகிறோம். இந்தியாவில் 10 இரண்டாம் நிலை நகரில் முன்னணியில் உள்ள கோவையில், ரியல் எஸ்டேட் முதலீடுகள் அதிகமாக உள்ளன. கடந்த சில ஆண்டுகளில் நல்ல அடிப்படை வசதிகளுடன், குடியிருப்பு வசதிகளை கொண்டுள்ள பகுதிகளாக காளப்பட்டி, சிங்காநல்லூர், திருச்சி ரோடு போன்றவை அமைந்துள்ளன. இங்குள்ள மக்கள் மிகவும் பரபரப்பாகவும், அன்பானவர்களாகவும், அவர்களது விரும்பும் வகையில் வீடுகள் இருக்க வேண்டும் என எதிர்பார்ப்பவர்களாகவும் உள்ளனர். இவர்களுக்கு சிறப்பான உள் அலங்கார தீர்வுகளை தர வேண்டும் என்பதில் உறுதியாக உள்ளோம்,” என்றார்.
கோவை கிளையின் வணிக தலைவர் மகேஷ் சிங் புதிய ஸ்டுடியோவை துவக்கி வைத்து பேசுகையில்,
“எங்களுக்கு கோவை ஒரு விருப்பமான சந்தையாக உள்ளது. உள்ளுர் மக்களின் விருப்பம் மட்டுமின்றி, கோவையில் உள்ள வீடுகளில் முதலீடு செய்யும் வெளிநாட்டினருக்கும் சிறந்த தீர்வுகளை அளிக்கிறோம். எங்களது, 3டி பரிமாணத்துடன் காட்சிகளை, மெய்நிகர் முறையில் அமைத்து காட்டுகிறோம். ஏற்கனவே நாங்கள் துபாய், சிங்கப்புர் மற்றும் தென்னாப்பிரிக்காவில் உள்ள வீட்டு உரிமையாளர்களை அணுகியுள்ளோம்,” என்றார்.