• Download mobile app
28 Nov 2024, ThursdayEdition - 3214
FLASH NEWS
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு
  • தமிழ்நாட்டில் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் வெயில் பதிவு!
  • “சந்திரபாபு நாயுடு கூறும் அனைத்துமே கட்டுக்கதைகள்” – ஜெகன் மோகன் ரெட்டி
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

ஹோலி பண்டிகையொட்டி எர்ணாகுளம் – பரௌனி இடையே வாராந்திர சிறப்பு ரயில்

March 3, 2022 தண்டோரா குழு

கோவை வழித்தடத்தில் கேரள மாநிலம் எர்ணாகுளம் – பிகார் மாநிலம் பரௌனி இடையே கோடை கால வாராந்திர சிறப்பு ரயில் இயக்கப்படுவதாக ரயில்வே நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து சேலம் கோட்ட ரயில்வே நிர்வாகம் தெரிவித்துள்ளதாவது:

எர்ணாகுளம் நிலையத்தில் இருந்து மார்ச் 4,11,18 மற்றும் ஏப்ரல் 1 ஆகிய வெள்ளிக்கிழமைகளில் இரவு 11.30 மணிக்கு புறப்படும் வாராந்திர அதிவிரைவு சிறப்பு ரயில் ஞாயிற்றுக்கிழமைகளில் பரௌனி ரயில் நிலையத்தை சென்றடையும்.

அதேபோல், பரௌனி நிலையத்தில் இருந்து மார்ச் 8,15,22,29 மற்றும் ஏப்ரல் 5 ஆகிய செவ்வாய்க்கிழமைகளில் மாலை 4.30 மணிக்கு புறப்படும் வாராந்திர சிறப்பு ரயில் வியாழக்கிழமைகளில் பிற்பகல் 2.30 மணிக்கு எர்ணாகுளம் நிலையத்தை சென்றடையும்.

இந்த சிறப்பு ரயிலானது, ஆலுவா, திருச்சூர், பாலக்காடு, கோவை, திருப்பூர், ஈரோடு, சேலம், காட்பாடி, ரேணிகுண்டா, நெல்லூர், விஜயவாடா, ஏலூரு, ராஜமுந்திரி, சாமல்கோட், விசாகப்பட்டணம், ஸ்ரீகாகுளம் சாலை, பாலசா, பெர்ஹாம்பூர், புவனேஷ்வர், கட்டாக், காரக்பூர், துர்காபூர், ஆசன்சோல், சித்தரஞ்சன், மதுபூர் உள்ளிட்ட ரயில் நிலையங்களில் நின்று செல்லும்.

இவ்வாறு ரயில்வே நிர்வாகம் தெரிவித்துள்ளது.

மேலும் படிக்க