May 22, 2017 தண்டோரா குழு
பிரேசிலை சேர்ந்த இரட்டை சகோதரிகள் தங்களுடைய 1௦௦வது பிறந்த நாளை இம்மாதம் 24ம் தேதி சிறப்பாக கொண்டாடவுள்ளார்கள்.
தென் அமெரிக்கவிலுள்ள பிரேசில் நாட்டை சேர்ந்த மரியா பிக்னேடன் பான்டின் மற்றும் பவுலினா பிக்னேடன் பான்டின். இருவரும் இரட்டை சகோதரிகள் ஆவர். அவர்கள் தங்களுடைய 1௦௦வது பிறந்த நாளை இம்மாதம் 24ம் தேதி கொண்டாடவுள்ளார்கள். அவர்களை குறித்து கேள்விப்பட்ட கமிலா லிமா என்னும் புகைப்படகாரர், அவர்களுடைய பிறந்த நாளுக்கு முன்பாகவே அவர்களுடைய புகைப்படத்தை இலவசமாக எடுத்துத் தர முன் வந்தார்.
“அவர்களுடைய குடும்பத்தினரை தொடர்புக்கொண்டு, போட்டோசூட்டை அவர்களுக்கு ஒரு பரிசாக வழங்க விரும்புவதாக தெரிவித்தேன். அவர்களும் அதற்கு சம்மதம் தெரிவித்தனர். அந்த சகோதரிகள் அழகான நீளம் மற்றும் பிங்க் ஆடையை அணிந்து, சிகை அலங்காரம் செய்துக்கொண்டு புகைப்படம் எடுக்க பிரேசில் நாட்டின் விட்டோரியா என்னும் இடத்திற்கு வந்தனர்” என்று லிமா தெரிவித்தார்.
பாலினாவிற்கு 6 குழந்தைகள், 19 பேரபிள்ளைகளும், 16 கொள்ளு பேரபிள்ளைகளும் உண்டு. அவர் புற்றுநோயால் பாதிக்கப்பட்டு, அதிலிருந்து மீண்டு வந்தவர். இரண்டு முறை மாரடைப்பால் பாதிக்கப்பட்டவர். மரியாவிற்கு 5 குழந்தைகளும், 12 பேரபிள்ளைகளும் 7 கொள்ளு பேரபிள்ளைகளும் உண்டு என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும், தங்களது 100வது பிறந்தநாளை முன்னிட்டு விழாவுக்கு 100 பேரை அழைக்கவும் திட்டமிட்டுள்ளனர்.