October 6, 2021 தண்டோரா குழு
கோவை மாவட்ட ஆட்சியர் சமீரன் கூறியிருப்பதாவது:
தமிழக அரசு மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு (எம்பிசி) ஏற்கனவே வழங்கப்பட்ட இருபது சதவீத இட ஒதுக்கீட்டிற்குள் மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் (வன்னியகுல ஷத்ரியர்) எம்பிசி (வி) – 10.5 சதவீதம், மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்புகள் மற்றும் சீர்மரபினர் (எம்பிசி மற்றும் டிஎன்சி) 7 சதவீதம், மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் எம்பிசி-2.5 சதவீதம் சிறப்பு இட ஒதுக்கீடு வழங்கி ஆணையிடப்பட்டதை தொடர்ந்து, கோவை மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில் நெறி வழிகாட்டும் மையத்தில் பதிவு செய்துள்ள மேற்காணும் வகுப்பு பதிவுதாரர்கள் தங்களுடைய சாதி மற்றும் உட்பிரிவு சரியாக உள்ளதா? என www.tnvelaivaaippu.gov.in இணையதளத்திலேயோ அல்லது நேரில் தொடர்பு கொண்டோ சரிபார்த்துக்கொள்ள வேண்டும்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.