• Download mobile app
25 Nov 2024, MondayEdition - 3211
FLASH NEWS
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு
  • தமிழ்நாட்டில் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் வெயில் பதிவு!
  • “சந்திரபாபு நாயுடு கூறும் அனைத்துமே கட்டுக்கதைகள்” – ஜெகன் மோகன் ரெட்டி
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

100 மில்லியன் மக்கள் வேலைவாய்ப்பு இழந்து வருகின்றனர் – கோவை ஜி20 மாநாட்டில் ஆளுனர் ஆர்.என் ரவி பேச்சு

March 20, 2023 தண்டோரா குழு

கோவை குனியமுத்தூர் அருகே உள்ள ஸ்ரீ கிருஷ்ணா பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரியில் ஜி 20 நாடுகளின் இளம் தூதுவர்கள் உச்சி மாநாடு 2023 நடைபெற்று வருகிறது.

இளைஞர்களின் எதிர்கால முன்னேற்றத்திற்கான தூண்டுகோல் என்ற தலைப்பில் நடைபெற்று வரும் இந்த மாநாட்டை துவங்கி வைத்து தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி தலைமை உரையாற்றினார்.மேலும் இந்த நிகழ்ச்சியில் மத்திய இணை அமைச்சர் எல். முருகன், ஜி 20 மாநாட்டின் தலைவர் (ஷெர்பா)அமிதாப் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

இந்த நிகழ்ச்சியின் முன்னதாக மத்திய இணை அமைச்சர் எல் முருகன் பேசுகையில்,

கோவையில் ஜி-20 மாநாடு நடைபெறுவது நமக்கு பெருமை.சொந்த முயற்சியில் நாம் வேக்சின் தயாரித்து உலக நாடுகளுக்கு வேக்ஸின் கொடுத்தோம்.அது பிரதமருக்கு பெருமைக்கு உரியுது.கொரோனா காலத்தில் காஷ்மீர் முதல் அந்தமான் வரை இருக்கும் அனைவருக்கும் கல்வி சென்றடைய இ வித்யா போர்டல் மூலம் கல்வி கொடுத்தோம். ஒன்பது ஆண்டில் 1 லட்சம் ஸ்டார்ட்டப் நிறுவனங்கள் வந்துள்ளது.தாய் மொழி கல்வியை ஆரம்பக் கல்வியில் கொடுக்க வேண்டும் என்பது புதிய தேசிய கல்விக் கொள்கையின் தாரக மந்திரம்.இந்தியாவில் 65 சதவீதம் பேர் 35 வயதிற்கு கீழ் உள்ளனர். இங்கு அதிகளவில் இளைஞர்கள் உள்ளனர். இவ்வாறு பேசினார்.

ஜி 20 மாநாட்டின் தலைவர் (ஷெர்பா)அமிதாப் பேசும்போது,

100 மில்லியன் மக்கள் வேலைவாய்ப்பு இழந்து வருகின்றனர்.‌75 நாடுகள் காலநிலை மாற்றம் காரணமாக பல்வேறு பிரச்சினைகளில் இருந்து வருகிறது. பொருளாதார ரீதியான பாதிப்பும் உள்ளது. இது போல் உலகளவில் பிரச்சினை இருந்து வரும் நிலையில் இந்தியா ஜி20 மாநாட்டிற்கு தலைமை ஏற்றுள்ளது.‌

ஜி20 தொடர்பாக 59 நகரங்களில் 220 கூட்டம் நடத்தப்பட்டு உள்ளது. இந்தியாவில் டிஜிட்டல் தொழில்நுட்பம் வளர்ச்சி அடைந்து உள்ளது. உலக அளவில் இந்தியா டேட்டா பயன்பாட்டிலும், மொபைல் பயன்பாட்டிலும் முதலிடம் வகிக்கிறது. கழிவறை வசதி, குடிநீர் வசதி, சாலை வசதி போன்றவை அனைவருக்கும் கிடைக்கும் வகையில் மேம்படுத்தப்பட்டு உள்ளது. 500 மில்லியன் மக்களுக்கு ஹெல்த் இன்சூரன்ஸ் அளிக்கப்பட்டு உள்ளது. பிரதமர் பெண்கள் வளர்ச்சிக்கு அதிக முக்கியத்துவம் அளித்து வருகிறார். 80 சதவீதம் பெண்கள் வங்கி கணக்கு வைத்துள்ள நிலையை எட்டியுள்ளோம். ஜி20 பற்றி அனைத்து மக்களும் தெரிந்து கொள்ள வேண்டும் என்பதில் பிரதமர் உறுதியாக உள்ளார்.

இவ்வாறு பேசினார்.

தமிழக ஆளுனர் ஆர்.என்.ரவி தலைமை உரையில் பேசும்போது,

தமிழ் கலாச்சாரம் நாகரீகம் ஆகியவை 7000 ஆண்டுகள் பழமையானது.கடலை கூடையில் ஊற்றியது போல் உள்ளது திருக்குறள், அதேபோல் புறநானூறு உள்ளிட்ட சங்க இலக்கியங்கள், தமிழின் பாரம்பரியத்தை பிரதிபலிக்கிறது. தற்போது இயற்கை தொடர்பான பிரச்னை, உணவு பஞ்சம், பொருளாதார ரீதியான பாதிப்பு, போர்கள் இருக்கிறது. உலகளவில் ஒரு அமைதியான சூழல் இல்லாத நிலை உள்ளது. பல நாடுகள் ஆயுதங்களை அழித்து வருகிறது. எளிமையான, சொகுசான வாழ்வியலுக்கு தொழில்நுட்ப உதவியால் பல சாதனங்கள் பயன்படுத்தி வந்தாலும், நிம்மதி, மகிழ்ச்சி நம்மிடையே இல்லை.

வளர்ந்த நாடுகளில் கூட பெண்கள் பாகுபாடு பார்க்கப்படுகிறது.ஆண், பெண் பாலினம் தொடர்பாக பல பிரச்சினைகள் உள்ளன. வேளாண்மை துறையில் பாதிப்பு உள்ளது. பல்வேறு நாடுகளில் வறுமை நிலை உள்ளது. இது போன்ற பல்வேறு பிரச்சனைகளுக்கு மாநாட்டில் தீர்வு காண வேண்டும்.பிரிட்டிஷ் வெளியேறும் போது நாம் பஞ்சத்தை எதிர்க்கொண்டோம். ஆனால், நம் விஞ்ஞானிகளால் அதனை மிக குறுகிய காலத்திலேயே அந்த பிரச்னை இல்லா நிலையை அடைந்தோம்.

கொரோனா பாதிப்பு காலத்தில் தலைசிறந்த நாடுகள் மருந்துகள், தடுப்பூசிகள் இல்லாமல் பாதிக்கப்பட்டன.‌ அந்த நேரத்தில் நம் விஞ்ஞானிகள் கண்டுப்பிடித்த தடுப்பூசியை உலக நாடுகள் ஏற்றுக்கொண்டது. இலவசமாக நம் மக்களுக்கு தடுப்பூசி வழங்கப்பட்டன.
இந்தியா 200 நாடுகளுக்கும் மேல் கொரோனா தடுப்பூசியை இலவசமாக வழங்கியது.

இந்தியாவின் கலாச்சாரம், ஆன்மீகம் பல ஆண்டுகள் பழமையானது.பாரத நாட்டை பற்றி இளைஞர்கள் தெரிந்து கொள்ள வேண்டும். பல நாடுகள் ராணுவம் கட்டமைப்பை பலப்படுத்தி பிற நாடுகளை துன்புறுத்தி வருகிறது.‌ ஆனால், நாம் யாரையும் துன்புறுத்துவது இல்லை. யாதும் ஊரே யாவரும் கேளிர் என்பது நம் டிஎன்ஏ-வில் உள்ளது. பிரிட்டிஷ் அரசு சென்ற பிறகு நமது பாலிசிகள் மேம்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டு பல முன்னேற்றங்களை அடைந்து உள்ளோம்.

கடந்த 9 ஆண்டுகளில் மிகப்பெரிய மாற்றங்களை நம் நாடு சந்தித்துள்ளது.500 மில்லியன் வங்கி கணக்கு திறப்பு, 100 மில்லியன் விவசாயிகளுக்கு நேரடி சலுகை, 30 மில்லியன் மக்களுக்கான வீடுகள் என பல நன்மைகளை கடந்த 9 ஆண்டுகள் இந்தியா சந்தித்துள்ளது.அனைத்து துறைகளிலும் வளர்ச்சி இருந்தாலும் வடக்கு, தெற்கு என‌ பிரிந்து உள்ளோம். இதனால் பிரதமர் ஒரு குடும்பம் என்ற நிலையை ஏற்படுத்த முயற்சி செய்து வருகிறார்.

குடும்பம் என்றால் நம்பிக்கை. அதனால் நீங்கள் அனைவரையும் நம்ப வேண்டும்.இது மக்களுக்கான மைய ஆட்சி. இந்த ஜி20 இளைஞர் தூதுவர் மாநாடு மிகவும் முக்கியமானது. இளைஞர்களுக்கான வருங்காலம் பற்றி பேச உள்ளது. நீங்கள் தான் எதிர்காலம். எனவே உங்களின் எதிர்காலம் எப்படி இருக்க வேண்டும் என்பது தொடர்பான ஆலோசனைகளை வழங்க வேண்டும். இல்லை என்றால் தலைவர்கள் வழங்கும் ஆலோசனைகள் ஏற்றுக்கொள்ளப்படும். எனவே, இளைஞர்கள் தங்கள் ஆலோசனைகளை வழங்கி உரிய பங்களிப்பு அளிக்க வேண்டும்.

இளைஞர்கள் நீங்கள் தான் நம் அடுத்த தலைவர்கள் என்பதை புரிந்து உங்களை நீங்களே தயார் படுத்தி கொள்ள வேண்டும். இளைஞர்கள் தூதுவர்கள் உங்கள் தேவைகளை நிறைவேற்றும் வகையில் செயல்பட வேண்டும். அது உங்கள் எதிர்காலம், கனவுக்கு ஏற்றதாக அமைய வேண்டும். இந்தியாவில் நீண்ட காலத்திற்கு பிறகு ஆண்களை விட பெண்கள் எண்ணிக்கை அதிகளவில் உள்ளனர்.‌

தமிழகத்தில் புதிய வாக்காளர் பட்டியலில் ஆண்களை விட பெண்கள் 50,000 அதிகமாக உள்ளனர்.90 மில்லியன் மகளிர் சுய உதவி குழுக்கள் உள்ளது. பெண்கள் பல துறைகளில் சிறந்து விளங்கி வருகின்றனர். இது எப்படி நடந்தது என்பதை குறித்து கவனமாக ஆராய வேண்டும். அனைத்து மாணவர்கள், இளைஞர்கள் தங்களுக்குள் உள்ள தொடர்பை வலுப்படுத்த வேண்டும். இதன் மூலம் உங்கள் கனவுகளை நிறைவேற்ற முடியும்.

இவ்வாறு அவர் பேசினார்.

மேலும் படிக்க