September 18, 2017 தண்டோரா குழு
ஷாங்காய்,
சீனாவில் சுமார் 135 ஆண்டுகள் பழமையான புத்தர் கோவில் ஒன்று முழுவதுமாக சுமார் 100 மீட்டர் தூரம் தொழில்நுட்ப உதவியுடன் நகர்த்தப்பட்டது.
இந்த புத்தர் ஆலயதிற்கு ஒவ்வொரு நாளும் சுமார் 1௦,௦௦௦ சுற்றுலா பயணிகள் வந்து செல்கின்றனர். அங்கு மக்கள் அதிக அளவில் சென்று வருவதாலும், அந்த கோவிலில் தூபம் ஏற்றுவதால், தீ ஆபத்து ஏற்படக்கூடும் என்று அந்த கோவில் அதிகாரிகள் அஞ்சினர்.
இதையடுத்து, அந்த கோவிலின் பாதுகாப்பு கருதி, அதை வேறு ஒரு இடத்திற்கு மாற்ற முடிவு செய்தனர். பிறகு, புதிய தொழில்நுட்பங்கள் மூலம் அந்த கோவிலை சுமார் 1௦௦ மீட்டர் தூரம் நகர்த்தப்பட்டது.
மேலும் அந்த கோவில் சுமார் 1 மீட்டர் அளவு உயர்த்தப்பட்டது என்றும் அந்த கோவிலை நகர்த்த வேண்டி 2 வாரங்கள் பணிகள் நடந்தன என்றும் அதிகாரிகள் தெரிவித்தனர்.