• Download mobile app
23 Nov 2024, SaturdayEdition - 3209
FLASH NEWS
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு
  • தமிழ்நாட்டில் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் வெயில் பதிவு!
  • “சந்திரபாபு நாயுடு கூறும் அனைத்துமே கட்டுக்கதைகள்” – ஜெகன் மோகன் ரெட்டி
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

100 வருடங்கள் சூரியனை காணாத கிராமம்

June 8, 2016 தண்டோரா குழு.

இந்தியா சுதந்திரம் அடைவதற்கு முன்பு எத்தனையோ கிராமங்கள் மின்சார வசதியில்லாமல் இருந்தது உண்டு. இப்போதும் சில மலைக்கிராமங்களில் குக்கிராமங்களில் மின்வசதியோ சாலை வசதியோ இருப்பதில்லை. இவ்வாறு கஷ்டப்படும் இடங்கள் இன்னும் வெளிச்சை எதிர்பார்த்துக் கொண்டு இருக்கின்றனர்.

ஆனால் ஒரு நகரம் முழுதும் சூரிய வெளிச்சமே படாமல் இருக்குமா? அதுவும் நூறாண்டுகளாக. கேட்கவே ஆச்சரியமாக இருக்கிறதல்லவா? சூரிய ஒளியைக் காணாத நகரத்தில் வசிக்கும் மக்கள் எப்படி வாழ்ந்திருப்பார்கள்? வியப்பாக இருக்கிறதல்லவா?

ஐரோப்பிய நாடான நார்வே, கனிமம் மற்றும் பெட்ரோல் வளமிக்க நாடாகும். இங்கு மழை பொழிவும் அதிகம். இந்த நார்வே நாட்டின் தென்பகுதியில் அடர்ந்த மலைகள் சூழ்ந்த பள்ளத்தாக்குகள் அதிகமாக இருக்கின்றன. அப்படி ஒரு பள்ளத்தாக்கு பகுதியில் அமைந்துள்ளது மிக அழகான, பசுமையான, அமைதியான எழில் மிகும் கிராமம் ஒன்று.

அந்தக் கிராமத்தின் பெயர் ரூஜூக்கான். அந்தப் பள்ளத்தாக்கு கிராமத்திற்குச் செல்ல பெரிய வசதிகள் ஏதுமில்லைதான். அங்குள்ள நீராதாரத்தை அடிப்படையாகக் கொண்டு ஓர் உரத் தொழிற்சாலையும் ரெயில் பாதையும் மட்டுமே உள்ளது.

இந்த உரத்தொழிற்சாலையை நம்பியும் இப்பகுதியில் மண் வளம் உள்ளதால் விவசாயம் செய்து பிழைத்துக் கொள்ளலாம் என்று நம்பியும் நூறு ஆண்டுகளுக்கு முன் 300 பேர் இங்குக் குடியேறினார். தற்போது கிட்டதட்ட 3,500க்கும் அதிகமான மக்கள் வசிக்கிறார்கள். இந்தக் கிராமத்தில் ஆண்டில் 6 மாதங்கள் மழை மற்றும் குளிர் காலம். அதே சமயம் அடுத்த ஆறுமாதம் கூட சூரியனோ சூரிய ஒளியோ துளிகூட படமாமல் இருக்கும். காரணம் இந்த கிராமத்திதைச் சுற்றிலும் உள்ள மலை முகடுகள் தடைக்கற்களாக இருந்து, சூரிய ஒளிக்கதிர்களை நுழையவிடாமல் தடுத்துவிடும்.

இங்குள்ள மக்களின் உடலில் சூரியனின் கதிர்கள் விழ வேண்டும் என்றால் பல மைல்களுக்கு அப்பால் கடந்து செல்ல வேண்டும். இப்படித்தான் சூரிய வெளிச்சத்தைப் பார்க்க இயலாமல் இந்தக் கிராமத்தில் வசிக்கும் மக்கள் நூறாண்டுகளாக வசித்து வருகின்றனர். இந்தக் கிராம மக்களின் சோகத்தைப் போக்க ஒருவர் வந்தார்.

கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்னர் பாரிஸ்சில் இருந்த அங்கு வந்தவருடைய பெயர் மார்ட்டின் ஆண்டர்சன். அவர் அந்தக் கிராமத்தை சூழ்ந்து இருந்த இருளைப் போக்க ஒரு வழியைக் கண்டுபிடிக்க தீவிரமாக முயன்றார். இந்நகரத்திற்குச் சூரிய ஒளியைக் கொண்டு வருவது குறித்து பலவாறாகத் திட்டமிடப்பட்டு வந்த நிலையில் தற்போது சரியான ஒரு தீர்வு கண்டறியப்பட்டுள்ளது.

சூரிய காந்தி பூவைப் போல் சூரியன் போகும் திசையில் எல்லாம் அதைப் பின்தொடர்ந்து செல்லும் தொழில் நுட்பத்துடன் கூடிய கம்ப்யூட்டர்களின் உதவியால் இயங்கும் ராட்சத நிலைக் கண்ணாடிகளை மலைகளின் வடக்கு பகுதியின் உச்சியில் அமைக்கத் தீர்மானித்தார் மார்ட்டின் ஆண்டர்சன்.

அதன்படி, அதன் அருகில் உள்ள மலையில் சுமார் 450 மீட்டர் உயரத்தில் மூன்று பெரிய கண்ணாடிகளைப் பொருத்தியுள்ளனர். அக்கண்ணாடிகளில் படும் சூரிய வெளிச்சம் எதிரொலிப்பதன் மூலம் நகரின் மத்தியப் பகுதியில் சூரிய வெளிச்சம் படுகின்றது.

8.5 லட்சம் அமெரிக்க டாலர்கள் செலவில் அமைக்கப்பட்ட இந்த நிலைக்கண்ணாடிகள் மூலமாக இந்தக் கிராமத்தின் மையப் பகுதியான சுமார் 600 சதுர மீட்டர் பரப்பளவு கொண்ட மார்க்கெட் பகுதி ஆண்டின் 365 நாட்களிலும் சூரிய ஒளியால் பிரகாசிக்கிறது.

கிட்டதட்ட நூறு ஆண்டுகள் சூரிய ஒளியே படாமல் இருந்த நார்வேயின் ருஜூகான் நகரம், தற்போது கண்ணாடியை கொண்டு சூரிய வெளிச்சத்தைப் பெற்று வருகிறது.

மேலும் படிக்க