December 18, 2017 தண்டோரா குழு
பிரான்ஸ் நாட்டில் சுமார் 10000ம் ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்த, மம்மூத் யானையின் எலும்புக்கூடு சுமார் 645,000 டாலருக்கு ஏலம் போனது.
சுமார் 10,000ம் ஆண்டுகளுக்கு முன், தாவரங்களை உண்டு வாழ்ந்த மம்மூத் யானைகள் வட அமெரிக்கா மற்றும் சைபெரியா நாடுகளில் வாழ்ந்து வந்தன. ஆனால், காலநிலை மாற்றம் மற்றும் வேட்டைக்காரர்களால் ஏற்பட்ட அச்சுறுத்தல் ஆகிய காரணங்களால், சுமார் 3,700 ஆண்டுளுக்கு முன் மம்மூத் யானைகளின் இனம் முற்றிலும் அழிந்துவிட்டது.
சுமார் 1௦ ஆண்டுகளுக்கு முன், வேடன் ஒருவர் வடமேற்கு சைபெரியா நாட்டில் மம்மூத் யானையின் எலும்புக்கூடை கண்டுபிடித்து, அதை தனது வீட்டில் வைத்திருந்தார். அவர் வைத்திருந்த அந்த எலும்புக்கூடு, தற்போது பிரான்ஸ் நாட்டின் அகுட்டேஸ் ஏல நிறுவனம் ஏலம் விட்டது.
அந்த எலும்புக்கூட்டை பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்த பியர் எட்டினே பின்ட்ச்செத்லேர், சுமார் 6,45,000 டாலருக்கு அதை வாங்கியுள்ளார். இந்த நிறுவனத்தின் அடையாள சின்னமாக (‘லோகோ’) யானை ஏற்கனவே உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.