May 13, 2022 தண்டோரா குழு
டாடா ஏஐஏ லைப்,சம்பூர்ணா ரக்ஸா சுப்ரீம் காப்பீட்டு திட்டம்,உங்களது குடும்பத்தின் நிதி பாதுகாப்பை தேர்வு செய்யும் வகையில் தேவையின் அடிப்படையில் உருவாக்கப்பட்டுள்ளது.முதல் நாளிலிருந்தே வரி இல்லா உறுதி சேமிப்பாக நூறு வயது வரை காப்பீட்டை தேர்வு செய்ய இயலும்.ஒருவரது இறப்பிற்கு பின் சேமிப்பானது வாரிசுதாரர்களுக்கு உடனடியாக கிடைக்கும். அல்லது சமமாக பகிர்ந்தளிக்கும் திட்டமாகவும் தேர்வு செய்யலாம்.ஆயுள் காலத்திற்கு பின் விரும்பிய ஒருவருக்கும் மாற்ற வசதி உண்டு. காப்பீடு செய்து கொள்வோர், தங்களது வாழ்நாளுக்கு ஏற்ப பிரிமீயம் தொகையை அதிகரித்து, நீட்டித்துக் கொள்ளலாம்.
பாலிசிதாரர்,23 வகையான சிறப்பு மருத்துவ உடனடி ஆன்லைன் ஆலோசனையை பெற முடியும். அவசர கால உதவியாக மருத்துவரை 180 நொடிகளில் தொடர்பு கொள்ள முடியும். தனிப்பட்ட மருத்துவ மேலாண்மை வசதியில், சர்வதேச நிபுணர்களையும் 24×7 முறையில் பன்னோக்கு மருத்துவ உதவியாக இருதயம் மற்றும் புற்றுநோய்க்கான ஆலோசனைகளை 3 மாதங்களுக்கு பெறலாம்.
ஆயுள் காப்பீட்டு திட்டத்தை 3 வகையான பயன்களில் அடிப்படையில் தேர்வு செய்யலாம்:
அ) ஆயுள் தேர்வு : முற்றிலும் சிரத்தை கொண்ட இந்த வகையில், பாலிசி வாங்கும் சமயத்தில் காப்பீட்டு உறுதி தொகையை தேர்வு செய்யலாம். பாலிசி காலத்தில் இறக்க நேரிட்டால், உறுதியளிக்கப்பட்ட தொகையையோ, விரைவுபடுத்தப்பட்ட பயன்களையோ வாரிசுதார்கள் பெறுவர்.
ஆ) ஆயுள் கூடுதல் தேர்வு : பிரிமீயத்தை திரும்ப தருவதுடன், பாதுகாப்புடன் கூடிய வகை இது. வாங்கும்போது தேர்வு செய்யப்படும் தொகை, தகுதியின் அடிப்படையில் வழங்கப்படும். பாலிசி சமயத்தில் இறக்க நேரிட்டால், உறுதியளிக்கப்பபட்ட தொகையோ, இறப்புக்கான பயன்களையோ வாரிசுதார்களுக்கு வழங்கப்படும்.
இ) ஆயுள் கால வருவாய் தேர்வு : இந்த முறையில், ஆயுள்கால பயனுடன், மாதந்திர வருவாய் பயனும் கிடைக்கும். பாலிசி வாங்கும்போது குறிப்பிடப்பட்ட தொகை, அதற்கான உறுதியளிக்கப்பட்டதொகையை, எந்த வயதிலிருந்து பெற வேண்டும் என தேர்வு செய்து, வருவாய் விகிதத்தின் அடிப்படையில் பெறலாம். ஒவ்வொரு மாத இறுதியிலும் துவங்கி, ஒவ்வொரு ஆண்டும் பாலிசி வருவாய், ஆயுள் காப்பீட்டுக்கு ஏற்ற வகையில் மாதந்திர தவணையாக இறப்பு வரை அளிக்கப்படும். அல்லது பாலிசி முடிவில் அளிக்கப்படும். இதில், எது முதலிலோ அதன்படி பெறலாம்.
கடன் பாதுகாப்பு முறை : முற்றிலும் சிரத்தையான இந்த வகையில், பாலிசி வாங்கும் சமயத்தில் தொகையை தேர்வு செய்யலாம். பாலிசி காலத்தில் இறக்க நேரிட்டால், உறுதியளிக்கப்பட்ட தொகையையோ, விரைவுபடுத்தப்பட்ட பயன்களையோ வாரிசுதார்கள் பெறுவர்.
பயன்கள் குறித்த விளக்கம் : அனைத்து பிரிமியமும் செலுத்தப்பட்டுள்ள பாலிசிக்கு, ஆயுள் கால காப்பீட்டின் போது இறக்க நேரிட்டால், அதற்கான பலன்களை வாரிசுதார்கள் பெறும் முறைகள் விளக்கப்பட்டுள்ளன.
• 1.25 x ஒரு முறை பிரிமியம் அல்லது 1 x முறையில் ஆண்டு பிரிமியம்.
• செலுத்தப்பட்ட பிரிமியத் தொகையில் (மாதிரி பிரிமியங்கள் தவிர்த்து) 105 சதம் தொகையை இறப்பு வரை பெறலாம்
• இறப்புக்கு பின் உறுதியளிக்கப்பட்டுள்ள தொகையை முழுமையாக பெறலாம்
• ஆயுள் கால பயன்களை லைப் ஆப்ஷனில் 7 மடங்கும், லைப் பிளஸ் தேர்வில் 11 மடங்கும் பெறலாம்.
டாடா ஏஐஏ லைப் இன்சுரன்ஸ் சம்பூர்ணா ரக்ஸா சுப்ரீம் பிளான், ரொக்கத்தில் பயனளிக்கும் திட்டமாகும். தவணை திட்டமாக பயன்கள் தேர்வு செய்யப்பட்டிருந்தாலும், அனைத்து பயன்களையும் இறப்புக்குப்பின் வாரிசுதாரர்களுக்கு பயனளிக்கும். இந்த தவணை திட்டமானது ஆண்டு / அரையாண்டு / காலாண்டு / மாதந்திர அடிப்படையில் தேர்வு செய்யலாம். இறப்பு தகவல் தெரிவிக்கும் முன் ஏதேனும் தவணை இருந்தாலும், முதல் முறையிலேயே வழங்கப்படும். வருமான வரி விதிமுறைகளின் படி, வரி விலக்கும் பெறலாம்.