May 27, 2017
தண்டோரா குழு
108 ஆம்புலன்ஸ் சேவைக்கு விரைவில் மொபைல் ஆப் அறிமுக்கப்படுத்தப்படும் என்று சுகாதாரத்துறை அமைச்சர் சி.விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்.
சென்னை தேனாம்பேட்டை டி.எம்.எஸ் வளாகத்தில் அமைந்துள்ள 108-ன் தலைமை அலுவலகத்தில்,108 ஆம்புலன்ஸ் சேவையில் பணியாற்றும் ஓட்டுநர்களை (பைலட்) கவுரவிக்கும் நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் சுகாதாரத்துறை அமைச்சர் சி.விஜயபாஸ்கர் நேற்று கலந்து கொண்டு பேசினார்.
அப்போது அவர் பேசியதாவது,
“108 ஆம்புலன்ஸ் சேவைக்கான புதிய மொபைல் ஆப் விரைவில் அறிமுகம் செய்யப்பட உள்ளது. ஒரு விபத்தோ, உடல்நலக் குறைபாடோ ஏற்படும்போது, 108 கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் தெரிவிப்பவர்கள் பொதுவாக பதற்றத்தில் இருப்பார்கள். அவர்களால் எந்த இடத்தில் விபத்து நடைபெற்றது என்பது குறித்த தகவல்களை தெளிவாக தெரிவிக்க இயலாது.
இந்த மொபைல் செயலி அறிமுகப்படுத்தப்பட்ட பின் 108 சேவையை தொடர்பு கொள்ளும் பொழுது தொடர்புகொள்பவர் இருக்கும் இடத்தின் முழு முகவரியும் சேவை மையத்திற்கு தெரிய வரும். இதன் மூலம் அதிவிரைவாக சம்பவ இடத்தை அடைய முடியும்.
மேலும் இச்சேவையை தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களால் விரைவில் துவக்கி வைக்கப்படவுள்ளது”. என்றார்.