• Download mobile app
23 Nov 2024, SaturdayEdition - 3209
FLASH NEWS
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு
  • தமிழ்நாட்டில் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் வெயில் பதிவு!
  • “சந்திரபாபு நாயுடு கூறும் அனைத்துமே கட்டுக்கதைகள்” – ஜெகன் மோகன் ரெட்டி
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

சென்னை ஷிவ் நாடார் பல்கலைக்கழகம், 2024-25ஆம் கல்வியாண்டுக்கான இளங்கலை பட்டப்படிப்புக்கான மாணவர் சேர்க்கை தொடங்கியுள்ளது

January 17, 2024 தண்டோரா குழு

சென்னை ஷிவ் நாடார் பல்கலைக்கழகம், 2024-25ஆம் கல்வியாண்டுக்கான இளங்கலை பட்டப்படிப்புக்கான மாணவர் சேர்க்கை தொடங்கியுள்ளது.

விண்ணப்பதாராகக் கூடிய அனைவரையும் உள்ளடக்கியும், அவர்களின் வசதிக்கு ஏற்ப ஆதரவளிக்கவும் இப்பல்கலைக்கழகம் உறுதி கொண்டுள்ளது, இப்பல்கலைக்கழகம் ஷிவ் நாடார் பல்கலைக்கழகப் பொது நுழைவுத் தேர்வை (ளுNருஊநுநு) 2024 நடத்துகிறது. இந்த கணினி அடிப்படையிலான ஆஃப்லைன் தேர்வு நாடு முழுவதும் நடைபெற உள்ளது, இதனால் மாணவர்கள் தங்கள் உள்ளூர் மையத்தை இத்தேர்வுக்கு தேர்ந்தெடுக்கலாம். பன்னாட்டு மாணவர்களைக் கவரும் வகையில், இப்பல்கலைக்கழகம் துபாயில் ஒரு தேர்வு மையத்தையும் அமைத்துள்ளது.

90 ஆண்டுகளுக்குப் பிறகு (அண்ணாமலைப் பல்கலைக்கழகச் சட்டம் 1928-இல் இருந்து), ஷிவ் நாடார் பல்கலைக்கழகச் சட்டம் 2018 இயற்றப்பட்டதன் மூலம், தமிழ்நாட்டில் சட்டமியற்றப்பட்ட முதல் மாநில-தனியார் பல்கலைக்கழகம் சென்னை ஷிவ் நாடார் பல்கலைக்கழகம் ஆகும். இப்பல்கலைக்கழகம் பொறியியல், வணிகம், பொருளாதாரம் உள்ளிட்ட ஆறு சிறப்பு இளங்கலைப் பாடத்திட்டங்களை வழங்குகிறது. இந்த நவீன பாடத்திட்டங்கள் தொழில்துறையின் தேவைகளுக்கு ஏற்ப வடிவமைக்கப்பட்டுள்ளன, உள்நாட்டிலும் பன்னாட்டு அளவிலும் ஒரு ஆற்றல்மிக்க தொழில்முறை மற்றும் கல்விச் சூழலில் வெற்றியடைய மாணவர்களுக்கு அதிகாரம் அளிக்கும் அறிவு மற்றும் திறன்களை வளர்க்கின்றன.

இதற்குப் பதிவு செய்ய, https://www.snuchennai.edu.in/admission – இல் உள்நுழையவும்.

சென்னை, ஷிவ் நாடார் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் பேராசிரியர் ஸ்ரீமான் குமார் பட்டாச்சார்யா அவர்கள் இந்த அறிவிப்பு குறித்து இவ்வாறு கருத்து தெரிவித்தார்,”பலதிறன் வாய்ந்த வேலைச் சந்தையில், அறிவு ஒரு நம்பிக்கைக்குரிய நாளைக்கான முக்கிய உந்துதலாக இருக்கும் என்று எதிர்பார்த்து, தொலைநோக்குப் பார்வையும், செயலூக்கமும், விரிவான திறனும் உள்ளவர்கள் வெற்றிபெற முடியும். தொடர்ந்து நிலைமாறிவரும் சூழ்நிலையில் செழித்து வளர நிபுணத்துவத்துடன் சென்னை ஷிவ் நாடார் பல்கலைக்கழகத்தில், எங்கள் மாணவர்களுக்கு பலதிறன் வாய்ந்த புதுமையான பொறியியல், வணிகம் மற்றும் மானுடவியல் பாடத்திட்டங்களை வழங்குவதில் நாங்கள் பெருமிதம் கொள்கிறோம்.

எங்கள் 2024ஆம் ஆண்டு சேர்க்கைக்கான தேர்வு தேதிகள் அறிவிக்கப்பட்டவுடன், திறமையான மற்றும் உற்சாகமான நபர்களின் புதிய குழுவை வரவேற்க நாங்கள் ஆவலுடன் காத்திருக்கிறோம்.”

கல்விசார்ந்தவைக்கு அப்பால், மாணவர்கள் தங்கள் திறமைகளை வெளிப்படுத்த நிரலாக்கப் போட்டிகள் (ஹேக்கத்தான்கள்) மற்றும் பிற போட்டிகள் போன்ற அறிவை வளர்க்கும் நடவடிக்கைகளில் பங்கேற்க வாய்ப்புகள் வழங்கப்படுகின்றன. 2023ஆம் ஆண்டில், அரசாங்கத்தின் தலைமையிலான ஸ்மார்ட் இந்தியா ஹேக்கத்தான் மற்றும் பல ஹேக்கத்தான்களுக்கு இப்பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த ஒரு பெரிய குழு மாணவர்களை உள்ளடக்கிய பல குழுக்கள் தேர்ந்தெடுக்கப்பட்டன.

தகுதி வரம்பு:

இளங்கலைப் பாடத்திட்டங்கள்: 12ஆம் வகுப்பு பள்ளி வாரியத் தேர்வுகளை முடித்த அல்லது தேர்வு எழுதியவர்கள் விண்ணப்பிக்கத் தகுதியுடையவர்கள் ஆவர். நுழைவுத் தேர்வின் அடிப்படையிலான சேர்க்கை, நேர்காணல் மற்றும் பள்ளி வாரியத் தேர்வில் குறைந்தபட்சம் 75% மதிப்பெண்களைப் பெறுவதற்கு உட்பட்டது. தேர்வில் இரண்டு முக்கியப் பிரிவுகள் இருக்கும்: திறன் மற்றும் கள (டொமைன்) அறிவு. நுழைவுத் தேர்வு காலம்: இரண்டு மணிநேரம். தேர்வு முறை: தேர்வுத் திறன் (45 நிமிடங்கள்) மற்றும் கள (டொமைன்) அறிவு (75 நிமிடங்கள்) ஆகிய இரண்டையும் உள்ளடக்கும். ஜேஇஇ மெயினில் 90 சதவிகிதம் மற்றும் அதற்கு மேல் பெற்றுள்ள இந்திய மாணவர்கள், ஷிவ் நாடார் பல்கலைக்கழகப் பொது நுழைவுத் தேர்வு இல்லாமல் நேரடியாக சேர்க்கைக்கு விண்ணப்பிக்கலாம்.

மேலும் படிக்க