January 29, 2024 தண்டோரா குழு
உலகளாவிய அலுவலக பர்னிச்சர் விற்பனையில் முன்னணியில் உள்ள ‘ஸ்டீல் கேஸ்’ நிறுவனம் இமேஜ் ஐகானுடன் இணைந்து கோவை ஆர் எஸ் புரத்தில் புதிய கிளையை துவங்கியுள்ளது.
இந்த புதிய ஷோரூம், பிராண்டின் சிறந்த விற்பனையான இருக்கைகள், பணியிட வசதி மற்றும் வடிவமைப்பை பொறுத்து உருவாக்கப்படுகிறது.மேலும் இது புதுமை, நல்வாழ்வு மற்றும் பணிச்சூழலியல் ஆகியவற்றை முக்கிய நோக்கமாக கொண்டுள்ளது.ஸ்டீல்கேஸின் இந்த கிளை வாடிக்கையாளர்கள்,தொழில் வல்லுநர்கள், கட்டிடக் கலைஞர்கள் மற்றும் வடிவமைப்பாளர்களுக்கு நேரடி அனுபவத்தை வழங்குவதாக இருக்கும்.பணியிட சூழ்நிலை மற்றும் உற்பத்தி திறனை மேம்படுத்துவதில் கவனம் செலுத்துவதன் மூலம், ஸ்டீல் கேஸ் இருக்கை வாடிக்கையாளர்களின் தங்கள் அலுவலகச் சூழலில் வேலை செய்யும் எந்தவித இடையூறும் இல்லாமல் பணியை தொடரும் வகையில் அமைக்கப்பட்டுள்ளது.
ஸ்டீல் கேஸ் இந்தியா மற்றும் சார்க் நிறுவனத்தின் நிர்வாக இயக்குனர் தீர்த்தங்கர் பாசு பேசுகையில்,
எங்கள் இணையற்ற உலகளாவிய தொழில்நுட்ப இருக்கைகளை கோவைக்கு அறிமுகப்படுத்துவதில் நாங்கள் மகிழ்ச்சியடைகிறோம்.இந்த ஷோரூம், சிறப்பாகச் செயல்படும் இடங்களை உருவாக்குவதன் மூலம் மக்கள் தங்களின் சிறந்த பணியைச் செய்ய உதவுவதற்கான சூழலை உருவாக்கி தருகிறோம். இருக்கையின் அனுபவத்தை வழங்கவும் , பணியின் போது எந்த ஒரு அசௌகரியத்தையும் உணராமல் பணியை மேற்கொள்ள எங்கள் ஸ்டீல் கேஸ் இருக்கைகள் பங்காற்றும், என்றார்.
இமேஜ் ஐகானுடன் தலைமை நிர்வாக அதிகாரி சுரேஷ் பாபு ரங்கசாமி கூறுகையில்,
“கோயம்புத்தூர் ஷோரூமின் பிரமாண்ட திறப்பு எங்களுக்கு ஒரு அற்புதமான அத்தியாயத்தைக் குறிக்கிறது. ஸ்டீல் கேஸ் உடனான எங்கள் கூட்டாண்மை, படைப்பாற்றல், நல்வாழ்வை வளர்க்கும் பணிச்சூழலை உருவாக்க நிறுவனங்களை ஊக்குவிப்பதை நோக்கமாகக் கொண்டுள்ளது.இந்த கிளை பிரத்தியேக வழிகாட்டுதல் மற்றும் நேரடி அனுபவத்தை வழங்கும்.வாடிக்கையாளர்கள் ஸ்டீல் கேஸ் இன் நிபுணர் குழுவுடன் தொடர்பு கொள்ளவும் மற்றும் ஒவ்வொரு இருக்கை கண்டுபிடிப்புகளுக்கு பின்னால் உள்ள வடிவமைப்பு தத்துவம் மற்றும் மனிதனை மையமாகக் கொண்ட ஆராய்ச்சி பற்றிய நுண்ணறிவுகளை பெறவும் வழிவகுக்கும் என்றார்.