• Download mobile app
29 Sep 2024, SundayEdition - 3154
FLASH NEWS
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு
  • தமிழ்நாட்டில் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் வெயில் பதிவு!
  • “சந்திரபாபு நாயுடு கூறும் அனைத்துமே கட்டுக்கதைகள்” – ஜெகன் மோகன் ரெட்டி
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

கோவையில் யூரோ கிட்ஸ் தனது புதிய பாடத்திட்டமாக ‘ஹுரேகா’ எனும் புதிய பாடத்திட்டம் அறிமுகம்

September 28, 2024 தண்டோரா குழு

குழந்தை கல்வி ப்ரீ ஸ்கூல் செயல்பாட்டில் முன்னனி வகிக்கும் யூரோ கிட்ஸ் தனது புதிய பாடத்திட்டமாக ‘ஹுரேகா’ எனும் புதிய பாடத்திட்டத்தை அறிமுகப்படுத்தி உள்ளது.

குழந்தை கல்வி திறன்களை வளர்ப்பதில் முன்னனியில் உள்ள யூரோகிட்ஸ் , ‘ஹுரேகா’ எனும் புதிய பாடத்திட்டத்தை அறிமுகப்படுத்தி உள்ளது.

இது குறித்த செய்தியாளர்கள் சந்திப்பு கோவை ரேஸ்கோர்ஸ் பகுதியில் உள்ள தனியார் ஓட்டல் அரங்கில் நடைபெற்றது.இதில்,லைட்ஹவுஸ் லேர்னிங் நிறுவனத்தின் ப்ரி-கே பிரிவு (யூரோகிட்ஸ்) தலைமை நிர்வாக அதிகாரி செஷாசை, மற்றும் பாடத்திட்ட மேம்பாட்டு பிரிவின் தலைவர் டாக்டர் அனிதா மதன்,ஆகியோர் செய்தியாளர்களிடம் பேசினர்.இந்தியாவின் குழந்தைகள் பள்ளி ப் ரீ ஸ்கூல் பிரிவில் ஆழ்ந்த நிபுணத்துவமிக்க முன்னணி நிறுவனமான யூரோகிட்ஸ் தனது பாடத்திட்டத்தின் 8-வது பதிப்பான ‘ஹுரேகா’ [Heureka]- வை அறிமுகப்படுத்தி இருக்கிறது.

சிந்திக்கும் திறனை வெளிப்படுத்துவதை உணரச்செய்யும் பாடத்திட்டமாக அறிமுகப்படுத்தி உள்ள இது உலகப் புகழ்பெற்ற ஹார்வர்ட் பல்கலைக்கழகத்தின் ‘ப்ராஜெக்ட் ஜீரோ’ வினால் ஈர்க்கப்பட்டு இப்பாடத்திட்டம் வடிவமைக்கப்பட்டிருப்பதோடு,
நம் நாட்டின் தேசிய கல்விக் கொள்கை 2020-ன் முழுமையான வளர்ச்சிக்கான தொலைநோக்கு பார்வையுடன் உருவாக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தனர்.
இதன் தொடர் செயல்பாடுகளை கோவை மற்றும் தமிழ்நாடு முழுவதும் விரிவுபடுத்தும் விதமாக துவங்கப்பட்டுள்ளதாகவும், யூரோகிட்ஸ், அடுத்த 5 ஆண்டுகளுக்குள் தமிழ்நாட்டில் 210 புதிய மையங்களைத் திறக்க திட்டமிட்டுள்ளது.

மேலும், தமிழ்நாட்டில் 300 மையங்களை தொடங்கவும் இலக்கு நிர்ணயித்துள்ளதையும் சுட்டி காட்டினர்.
ஹுரேகா பாடத்திட்டமானது, குழந்தைகளுக்கு “எதை’ பற்றி சிந்திக்க வேண்டும் என்று வழக்கமாக கற்பிக்கும் முறைகளிலிருந்து முற்றிலும் மாறுபட்டு “எப்படி” சிந்திக்க வேண்டும் என்பதைக் கற்றுக்
கொடுப்பதாகவும் தெரிவித்தனர்.

இது குழந்தைகளின் இளம் மனதில் ஆர்வத்தைத் தூண்டுகிறது, கற்பனையை வளர்க்கிறது, எதையும் ஆராய்ந்து அறிந்து முடிவெடுக்கும் சிந்தனையை ஊக்குவிக்கிறது.இதனால் குழந்தைகள் எந்தவிதமான தகவல்களையும்
அப்படியே உள்வாங்கி கொள்ளாமல், அவைக் குறித்த ஆழ்ந்த புரிதல் மற்றும் அவை தொடர்பான படைப்பாற்றலை வெளிக்காட்டும் வகையில் அதில் ஆர்வத்துடன் தங்களது ஆளுமையை வெளிப்படுத்துவார்கள் என நம்பிக்கை தெரிவித்தனர்.

மேலும் கல்வி முறைகளில் அதிகம் கவனிக்கப்படாத மனரீதியான, உடல்ரீதியான, அறிவுசார்ந்த,பகுதிகளையும் கற்பிப்பதாக கூறிய அவர், ஹுரேகா பாடத்திட்டத்தின் முக்கியத் தூண்களாக 13 தனித்துவமிக்க பிரிவுகளைக் கொண்டு ஒவ்வொரு குழந்தையின் கற்றல் பயணத்திற்கு ஏற்றவாறு பிரத்தியேகமாக வடிவமைக்கப்பட்டிருப்பதால், கல்வியில் வெற்றி பெறுவதற்காகவே மட்டுமில்லாமல், அவர்கள் வாழ்நாள் முழுவதும் தனிப்பட்ட வளர்ச்சிக்கும் தயார்படுத்தும் வகையில் அமைக்கப்பட்டுள்ளதாக கூறினர்.

மேலும் படிக்க