• Download mobile app
05 Feb 2025, WednesdayEdition - 3283
FLASH NEWS
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு
  • தமிழ்நாட்டில் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் வெயில் பதிவு!
  • “சந்திரபாபு நாயுடு கூறும் அனைத்துமே கட்டுக்கதைகள்” – ஜெகன் மோகன் ரெட்டி
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

February 4, 2025 தண்டோரா குழு

கோவை பேரூர் தவத்திரு சாந்தலிங்க அடிகளார் தமிழ் கல்லூரி வளாகத்தில்
உலக தமிழ்க்காப்புக் கூட்டியக்கம் சார்பாக தெய்வத்தமிழ் வழிபாட்டாளர்கள் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.

இந்த கூட்டத்திற்கு பேரூர் ஆதீனம் தவத்திரு சாந்தலிங்க மருதாசல அடிகளார் மற்றும் தமிழ் பல்கலைக்கழக முன்னாள் துணைவேந்தர் முனைவர் சி சுப்பிரமணியம் ஆகியோர் தலைமையில் நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தில் பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன
அதில் கோவை மாவட்ட கலை இலக்கிய தமிழ் சமுதாய அமைப்புகளின் சார்பில் கடந்த 16 ஆண்டுகளாக தாய் மொழி நாள் பேரணிகள் நடந்து வருகின்றன.

அதேபோல் இந்த ஆண்டும் வருகிற 21ஆம் தேதி வெள்ளிக்கிழமை பிற்பகல் 2:30 மணி அளவில் கோவை சித்தாபுதூர் மகளிர் பாலிடெக்னிக் கல்லூரி வளாகத்தில் இருந்து தாய்மொழி நாள் பேரணி நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.மேலும் கோவை பேரூர் பட்டீஸ்வரர் கோவில் குடமுழுக்கு திருவிழா வருகிற 10-ஆம் தேதி நடைபெற உள்ளது
இந்த குடமுழுக்கு திருவிழாவில் சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பின் அடிப்படையில் தமிழ் வழியில் குடமுழுக்கு செய்வது தொடர்பான அரசு முடிவெடுக்க வேண்டும்.
என்று பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

இந்த ஆலோசனைக் கூட்டத்தில் தமிழ் சமூக ஆர்வலர்கள் பல்வேறு இந்து அமைப்புகளின் நிர்வாகிகள் 200க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

மேலும் படிக்க