April 14, 2016 India Times.com
வாழைப்பழத்தில் பல வகையான நார் சத்துக்கள், கலோரிககள், வைட்டமின்கள், தாதுப் பொருட்கள் உள்ளன.
பெரும்பாலும் மக்கள் பயன்படுத்தும் உணவு வகைகளை அரிசி, கோதுமை, சோளம் ஆகியவற்றிற்கு அடுத்து மக்கள் வாழைப்பழத்தைத் தான் உட்கொள்கின்றனர். ஏனெனில் இது குறைந்த விலையில் எளிதில் கிடைக்க கூடியதாக உள்ளது.
மேலும், ஒரு வாழைப்பழத்தில் 1௦8 கலோரியும் 17.5 கிராம் கார்போ ஹைரெடும் உள்ளது. அதேபோல் 6 இன்ஸ் வாழைப்பழத்தில் 9௦ கலோரிகள் உள்ளது. இதுமட்டுமின்றி பசி எடுக்காமல் இருக்க உதவும் பெக்டின் என்ற சத்தும் வாழைப்பழத்தில் உள்ளது.
இப்படி சந்துகள் நிறைந்த வாழைப்பழத்தை மட்டும் 8 முதல் 1௦ நாட்கள் வரை சாப்பிட்டால் உடல் எடையைக் குறைக்க முடியும், என இந்தோனேசியா நாட்டில் உள்ள பாளி நகரைச் சேர்ந்த ஊட்டச்சத்து நிபுணரும், உடற்பயிற்சி நிபுணருமான யூலியா டர்பத் ஒரு ஆய்வின் மூலம் கண்டுபிடித்துள்ளார்.
வாழைப்பழத்தில் என்ன பயன் உள்ளது என்பதைக் கண்டறிய யூலியா டர்பத் 12 நாட்கள் வெறும் வாழைப்பழத்தை மட்டும் உணவு முறையாக உட்கொண்டார். இந்த உணவு முறைக்கு அவர் வாழைப் பழத்தீவு உணவு எனப் பெயரும் வைத்தார்.
அந்த வாழைப் பழத்தீவு உணவு பழக்க முறை குறித்து அவர் கூறும் போது, பழுத்த வாழைப் பழங்களை மட்டும் தான் சாப்பிட வேண்டும், இதன் மூலம் ஒரு நாளைக்குத் தேவையான முழு கலோரியும் நமது உடலுக்கு வந்துவிடும்.
ஒரு நாளைக்குக் குறைந்து 3 லிட்டர் தண்ணீராவது குடிக்க வேண்டும், இதுமட்டுமின்றி சரியான உடற்பயிற்சி மேற்கொள்ள வேண்டும் எனவும் உடலில் களைப்பு நீங்கும் வரை போதுமான அளவு ஓய்வு எடுக்க வேண்டும் எனவும் தெரிவித்துள்ளார்.
மேலும், 12 நாட்கள் வாழைப் பழத்தீவு உணவு முறை உட்கொண்ட பிறகு அவரது உடல் ஆரோக்கியமாகவும், மனது தெளிவாகவும், நல்ல சிந்தனை கொண்டதாகவும் இருக்கிறது எனவும், தோல் பளபளவென இருப்பதாவும் குறிப்பிட்டுள்ளார்.
இந்த உணவு பழக்கம் மூலம் 22 கிலோமீட்டர் உயரம் கொண்ட மலை மீது ஏறி இறங்கியும் இவரது உடலில் எந்த களைப்பும் ஏற்படவில்லை எனத் தெரிவித்துள்ளார்.
ஆய்வின் முடிவில் வாழைப்பழம் உடை எடையைக் குறைப்பதற்கான அருமையான உணவு எனக் கூறிய அவர், வாழைப்பழத்துடன் சாப்பாடும் சேர்ந்து சாப்பிட்டால் உடல் எடை குறையாமல் அதிகரிக்கத் தான் செய்யும் எனக் தெரிவித்துள்ளார்.