April 21, 2017
தண்டோரா குழு
சூரத் வைர வியாபாரி தன்னுடைய நிறுவனத்தில் பணிபுரியும் 125 ஊழியர்களுக்கு ஊதிய உயர்வாக இருசக்கர வாகனத்தை பரிசாக அளித்துள்ளார்.
குஜராத் மாநிலத்தின் சூரத் நகரை சேர்ந்தவர் லக்ஷ்மிதாஸ் வெக்கரியா. அவர் வியாழக்கிழமை(ஏப்ரல் 2௦) மாலை பரிசளிப்பு விழாவிற்கு ஏற்பாடு செய்திருந்தார். அந்த விழாவிற்கு வரும்படி ஊழியர்களுக்கு அழைப்பு விடுத்திருந்தார். அவருடைய அழைப்பை ஏற்ற 125 ஊழியர்களும் விழாவிற்கு வந்திருந்தனர்.அவ்விழாவில் பகுதி நேரப் பணியாளர்களில் இருந்து உயர்மட்ட அதிகாரிகள் வரை அனைவருக்குமே இருசக்கர வாகனம் பரிசாக வழங்கப்பட்டுள்ளது. இதை சிறிதும் எதிர்ப்பார்க்காத ஊழியர்கள் நெகிழ்ச்சி அடைந்தனர்.
சூரத் நகரை சேர்ந்த மற்றொரு வைர வியாபாரி சவ்ஜி தோலாக்கியா என்பவர் தன்னுடைய நிறுவனத்தின் ஊழியர்களுக்கு வீடுகள் மற்றும் கார்களை பரிசாக தந்தார் என்பது குறிப்பிடத்தக்கது