February 12, 2017 தண்டோரா குழு
தமிழகத்தில் வி.கே . சசிகலா தலைமையில் ஆட்சியமைக்க அ.தி.மு.க. சட்டப்பேரவை உறுப்பினர்கள் 127 பேர் உறுதியாக உள்ளனர் என்று தமிழக கைத்தறி மற்றும் ஜவுளித்துறை அமைச்சர் ஒ.எஸ் மனியன் கூறியுள்ளார்.
இது தொடர்பாக அவர் செய்தியாளர்களுக்கு ஞாயிற்றுக்கிழமை அளித்த பேட்டியில் கூறியிருப்பதாவது:
” அ.தி.மு.க. கட்சியையும், தமிழக அரசின் நான்கரை ஆண்டு கால ஆட்சியையும் காப்பாற்ற வேண்டும் என்ற நோக்கத்தோடு அ.தி.மு.க. பொதுச்செயலாளர் வி.கே.சசிகலா முயற்சி செய்து வருகிறார்கள்.ஆனால் தமிழக முதலமைச்சர் ஒ. பன்னீர் செல்வம் கட்சியை உடைக்க வேண்டும் என்ற நோக்கத்தில் செயல்படுகிறார்.
தமிழகத்தில் வி.கே . சசிகலா தலைமையில் ஆட்சியமைக்க அ.தி.மு.க. சட்டப்பேரவை உறுப்பினர்கள் 127 பேர் உறுதியாக உள்ளனர் . தமிழக பொறுப்பு ஆளுநர் வித்யாசாகர் ராவ் அழைத்தால் அடுத்த நிமிடமே ஆட்சி அமைக்க தயாராகயிருக்கிறோம்.
சட்டப்பேரவை உறுப்பினர்களின் ஆதரவு கடிதத்தை அளுநரிடம் கொடுத்தப் பிறகும் ஆட்சியமைக்க இன்னும் அழைக்காததிற்கான காரணத்தை ஆளுநரிடம் தான் கேட்க வேண்டும். விரைவில் வி.கே.சசிகலா தமிழக முதலமைச்சராக பொறுப்பேற்று மக்கள் தேவையை நிறைவேற்றுவார் ”.
இவ்வாறு அவர் கூறினார்.