April 28, 2023 தண்டோரா குழு
சாப்ட்வேர் துறையில் திறமையை வளர்க்கும் முன்னணி தளமாக விளங்கும் நெக்ஸ்ட்வேவ் திகழ்கிறது. கடந்த 2 ஆண்டுகளில் 1300க்கும் மேற்பட்ட நிறுவனங்கள், தங்களது தொழில்நுட்ப திறமை பெற்றவர்களை தேர்வு செய்துள்ளது. சாப்ட்வேர டெவலப்பர், புல் ஸ்டேக் டெவலப்பர் முதல் டேட்டா இன்ஜினியர் மற்றும் டேட்டா ஆய்வலர்கள் வரை பல்வேறு பணிகளுக்கு இவர்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.
நெக்ஸ்ட்வேவ், தனிப்பட்ட சிசிபிபி 4.0 திட்டம், இளம் வயதினரின் திறனை மேம்படுத்தி தொழில்நுட்ப தேவையை நிரப்பும் விதமாக பணியாளர்களை உருவாக்கி வருகிறது. நாட்டின் தகவல் தொழில்நுட்ப நிறுவனங்களுக்கு தேவையான பயிற்சி பெற்ற திறன்கொண்டவர்களை நெக்ஸ்ட்வேவ் நிறுவனங்களுடன் எளிதாக இணைக்கிறது.
வேகமாக வளர்ச்சி பெற்று வரும் அக்செஞ்சர், பாங்க் ஆப்ப அமெரிக்கா, ஆரக்கிள், காக்னிஜன்ட் மற்றும் கோல்ட்மேன் சாச்ஸ் போன்ற பார்ச்சூன் 500 ஜெயன்ட் நிறுவனங்கள், நெக்ஸ்ட்வேவ் மாணவர்களை தேர்வு செய்துள்ளன. இந்த நிறுவனங்களின் பல்வேறு திறன்களுக்கு ஏற்றவாறு தயார் செய்துள்ளது. அடுத்த 5 ஆண்டுகளில் 10000க்கும் மேற்பட்ட நிறுவனங்களுக்கு மென்பொருள் பணியாளர்களுக்கு மாபெரும் வேலைவாய்ப்புகளை உருவாக்கும் தளமாக இது திகழும்.
இதுகுறித்து நெக்ஸ்ட்வேவ் தலைமை செயல் அதிகாரி ராகுல் அட்டுலுரி கூறுகையில்,
” அடுத்த 10 ஆண்டுகளில் இந்தியாவின் தகவல் தொழில்நுட்ப தொழிற்சாலை 3 மடங்கு உயரும். எங்களது முக்கிய நோக்கம், இளைஞர்களை தொழில்நுட்ப நிறுவனங்களுக்கு ஏற்ற வகையில் பயிற்சி அளிப்பது தான். பல நிறுவனங்கள், எங்களிடம் கற்றவர்களின் மதிப்பினை உணர்ந்துள்ளன. இந்த மைல்கல், நிறுவனங்களுக்கு தேவையான திறன் கொண்ட பணியாளர்களை உருவாக்குவதில் நாங்கள் சரியான பாதையில் செல்கிறோம் என்பதை உணர்த்துகிறது, ” என்றார்.
யுனிபைடு கம்யுனிகேஷன்ஸ் மனிதவள இயக்குனர் ஷில்பா சவுத்ரி மாணவர்களின் அனுபவங்கள் குறித்து பேசுகையில்,
” தகவல் தொழில்நுட்ப திறன்களில் நெக்ஸ்ட்வேவ் பட்டதாரிகள் வலுவான அடிப்படையில் உள்ளனர். நெக்ஸ்ட்வேவில், நாங்கள் தேர்வு செய்த பல மாணவர்கள், நன்றாகவே பணியாற்றுகின்றனர். விரைவாக அவர்கள் பணியை கற்றுக் கொள்கின்றனர். சில நாட்களிலேயே நிறுவனத்தின் புராஜெக்ட்களில் பணியாற்றத் தொடங்கிவிடுகின்றனர்,” என்றார்.
நெக்ஸ்ட்வேவ் பல்வேறு வாய்ப்புகளை உருவாக்க பல வகையான திட்டங்களை வகுத்துள்ளது. மாணவர்களுக்கு உதவும் வகையிலான ஸ்டார்ட் அப், கம்ப்யுட்டர் சயின்ஸ் பிரிவுகள் மற்றும் இன்ஜினியரிங் அல்லாத கல்விகளான பி.எஸ்சி., பி.காம், பிபிஏ போன்றோர்களையும் தகவல் தொழில்நுட்ப பணிக்கு மாற்ற பயிற்சிகள் தரப்படுகின்றன.
கேப்ஜெமினி அனலிஸ்ட் ஆக பணியாற்றும் நெக்ஸ்ட்வேவ் பயின்ற வைஷ்ணவி பேசுகையில், “
நெக்ஸ்ட்வேவ் எனது திறனை மேம்படுத்தியதோடு மட்டுமின்றி, இந்த பரவசப்படுத்தும் வேலை வாய்ப்பையும் உருவாக்கிக்கொடுத்துள்ளது. வேலைவாய்ப்பு குழுவினர், எவ்வாறு நேர்காணல்களை நம்பிக்கையோ எதிர்கொள்வது, விடையளிப்பது என்பது பற்றி கற்பித்தது. இந்த பயிற்சி, எனது இறுதி நேர்காணலை நன்றாக மேற்கொள்ள உதவியது,” என்றார்.