March 4, 2017 தண்டோரா குழு
ஜோர்டான்: ஜோர்டான் நாட்டில் தீவிரவாத தாக்குதலில் ஈடுப்பட்ட 15 குற்றவாளிகளுக்கு சனிக்கிழமை (மார்ச் 4) காலையில் தூக்குத் தண்டனை நிறைவேற்றப்பட்டது.
இவர்கள் அனைவரும் ஜோர்டான் நாட்டைச் சேர்ந்தவர்கள். ஜோர்டான் நாட்டின் தலைநகரான அம்மானின் தெற்குப் பகுதியில் உள்ள சூஆகா சிறைச்சாலையில் தூக்கிலிடப்பட்டனர்.
ஜோர்டான் நாட்டின் தகவல் அமைச்சர், மகுமுத் அல்-மொமணி கூறுகையில், “மரண வரிசையில் இருந்த 15 தீவிரவாதிகளுக்கு சனிக்கிழமை காலை தூக்கு தண்டனை நிறைவேற்றப்பட்டது. 2௦௦6ம் ஆண்டு முதல் 2௦14ம் ஆண்டு வரை மரண தண்டனை விதிப்பதில் கால இடைவெளி அதிகமாக இருந்தது. 1௦ குற்றவாளிகள் தீவிரவாதச் செயலைகளில் ஈடுபட்டதற்காகவும், 5 பேர் கற்பழிப்பு உள்ளிட்ட மற்ற குற்றங்களைச் செய்ததற்காகவும் தூக்கிலிடப்பட்டனர்” என்றார்.