October 5, 2016 தண்டோரா குழு
சென்னை உயர்நீதிமன்றத்தில் புதிதாக 15 நீதிபதிகள் பதவியேற்றுள்ளனர். இதன் மூலம் இந்த நீதிமன்றத்தில் பணியாற்றும், நீதிபதிகளின் எண்ணிக்கை 54ஆக உயர்ந்துள்ளது.
சென்னை உயர்நீதிமன்றத்தின் மொத்த நீதிபதிகளின் பணியிடங்களின் எண்ணிக்கை 60 ஆக இருந்தது. தற்போது, இந்த எண்ணிக்கை 75 ஆக உயர்த்தப்பட்டுள்ளது. ஆனால் நீதிபதிகளின் எண்ணிக்கை 39 ஆக மட்டுமே இருந்தது.
இதையடுத்து, காலியாக உள்ள நீதிபதி பணியிடங்களில் நியமிக்க 19 வழக்கறிஞர்கள், 11 மாவட்ட நீதிபதிகளின் பெயர்களை சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி எஸ்.கே. கவுல் தலைமையிலான ஐகோர்ட் நீதிபதிகள் கொண்ட குழு சுப்ரீம் கோர்ட்டுக்கும் மத்திய அரசுக்கும் பரிந்துரை செய்தது. இந்த பட்டியல் சுப்ரீம் கோர்ட் நீதிபதிகளின் ஆய்வு மற்றும் மத்திய சட்டத்துறையின் ஆய்வுக்குப் பின்னர் ஜனாதிபதிக்கு அனுப்பப்பட்டது.
இதையடுத்து, முதல்கட்டமாக 15 பேரின் பெயர்களுக்கு ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி ஒப்புதல் அளித்துள்ளார்.
பதவியேற்றுக்கொண்ட நீதிபதிகள் விபரம்:வழக்கறிஞர்கள்
01.ஜெ. நிஷா பானு.
02.வி.பார்த்திபன்.
03.கே.சுப்பிரமணியன்.
04.எம்.சுந்தர்.
05.அனிதா சுமந்த்.
06.எஸ்.எம்.சுப்பிரமணியன்.
07.எஸ்.எஸ். ரமேஷ்.
08.எம்.கோவிந்தராஜ்.
09.ஆர். சுரேஷ்குமார்.
மாவட்ட நீதிபதிகள்
10.ஏ.எம்.பஷீர் அகமது.
11.ஜி.ஜெயச்சந்திரன்.
12.சி.வி.கார்த்திகேயன்.
13. ரவிந்தீரன்.
14.பி.வேல்முருகன்.
15.எஸ்.பாஸ்கரன் ஆகியோர் ஐகோர்ட் நீதிபதிகளாக பதவியேற்றுக்கொண்டனர்.