January 4, 2018 தண்டோரா குழு
உலகின் அரிய சந்திர கிரகணம் சுமார் 150 ஆண்டுகளுக்கு பிறகு,வரும் 31ம் தேதி தோன்றவுள்ளது.
இவ்வாண்டின் முதல் சந்திர கிரகணம், இம்மாதம் 31ம் தேதி நடுஇரவு வருகிறது.இந்த சந்திர கிரகணம் சுமார் 77 நிமிடங்கள் வரை நீடிக்கும். இதற்கு ‘Blue Moon’ என்று பெயர்.இது சுமார் 150 ஆண்டுகளுக்கு பிறகு தோன்றுகிறது.
மத்திய ஆசியா, கிழக்கு ஆசியா, இந்தோனேசியா, நியூசிலாந்து, ஆஸ்திரேலியா ஆகிய நாடுகளில் மாலை நேரத்தில், இந்த சந்திர கிரகணம் முழுமையாக தெரியும். அலாஸ்கா, ஹாவாய்,கனடா ஆகிய நாடுகளில் சந்திர கிரகணத்தின் தொடக்கம் முதல் இறுதி வரை காணமுடியும். வட மற்றும் மத்திய அமெரிக்காவில் சந்திரன் மறைவது தடைப்படும்.
வரும் 2028ம் ஆண்டு, டிசம்பர் 31ம் தேதி, இந்த அரிய சந்திர கிரகணம் மீண்டும் தோன்றும். அதன் பிறகு, வரும் 2037ம் ஆண்டு, ஜனவரி மாதம் 31ம் தேதி தோன்றும். இந்த இரண்டு சந்திர கிரகணமும் முழுமையாக காணப்படும்.
கடந்த 2009ம் ஆண்டு, டிசம்பர் மாதம் 31ம் தேதி, சந்திர கிரகணத்தின் எட்டு சதவீதம் பகுதி வானில் தெரிந்தது. கடந்த 1866ம் ஆண்டு, மார்ச் மாதம் 31ம் தேதி இந்த கிரகணம் கடைசியாக தோன்றியது என்பது குறிப்பிடத்தக்கது.