• Download mobile app
30 Apr 2025, WednesdayEdition - 3367
FLASH NEWS
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு
  • தமிழ்நாட்டில் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் வெயில் பதிவு!
  • “சந்திரபாபு நாயுடு கூறும் அனைத்துமே கட்டுக்கதைகள்” – ஜெகன் மோகன் ரெட்டி
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

16 வயது சிறுமியை திருமணம் செய்த 60 வயது முதியவர்

August 17, 2017 தண்டோரா குழு

ஹைதராபாத்தில் 60 வயது முதியவருக்கு 16 வயது சிறுமியை திருமணம் செய்து வைத்த சம்பவம் அதிர்ச்சியை அளித்துள்ளது.

ஹைதராபாத் நகரின் நவாப் சாஹெப் குண்டாவைச் சேர்ந்தவர் சையதா உன்னிசா. அவருக்கு 16 வயது மகள் உண்டு. அவளை ஓமன் நாட்டை சேர்ந்த ஷேக் அஹமது என்னும் 65 வயது முதியவர் திருமணம் செய்து கொண்டு, மஸ்கட் நாட்டிற்கு அழைத்து சென்றுள்ளார். தன்னுடைய 16 வயது மகளை எப்படியாவது மீட்டு தருமாறு காவல்துறை அதிகாரிகளிடம் புகார் அளித்துள்ளார்.

ரம்ஜானுக்கு முன் ஹைதராபாதுக்கு ஷேக் அஹமத் வந்துள்ளார். தன்னுடைய விருப்பத்திற்கு மாறாக, தன்னுடைய மகளை தனது கணவரின் சகோதரி கௌசியா மற்றும் அவரது கணவர் சிகந்தர் திருமணம் செய்து வைத்ததாக அவர்கள் மீது குற்றம்சாட்டியுள்ளார்.

தன்னுடைய மகளை 5 லட்சம் ரூபாய்க்கு வாங்கியதாகவும், அந்த பணத்தை சிகந்தரிடம் தந்ததாகவும், அந்த தொகையை திருப்பி தந்தால், தன் மகளை மீண்டும் இந்தியாவிற்கு அனுப்பி வைப்பதாக ஷேக் அஹ்மத் தெரிவித்தார். அதோடு, ஷேக்கை திருமணம் செய்து கொண்டால், எப்படியெல்லாம் சொகுசாக வாழலாம் என்னும் காணொளியை தன் மகளிடம் சிக்கந்தர் காட்டி இருக்கிறார்.

திருமணத்திற்கு பிறகு, தம்பதிகள் ஹைதராபாத் நகரிலுள்ள ஒரு ஹோட்டலில் தங்கினர். அதன் பிறகு, ஷேக் மீண்டும் மஸ்கட் திரும்பினார். அதற்கு முன் தன்னுடைய மகளை சிக்கந்தர் வீட்டில் விட்டுள்ளார். அவள் மஸ்கட் செல்ல கடவுச்சீட்டு மற்றும் பயணத்திற்கு தேவையான ஆவணங்களை சிக்கந்தர் தயார் செய்துவிட்டு, அவளை மஸ்கட்டுக்கு அனுப்பி வைத்தார்.

தன் மகளை மீட்டு தருமாறு சிகந்தரிடம் பல முறை கேட்டும், அது குறித்து அவர் எந்த நடவடிக்கையும் மேற்கொள்ளவில்லை. தன் மகளை குறித்து கேட்கும்போதெல்லாம் அவர் தன்னை மிரட்டுகிறார் என்று உன்னிசா தன்னுடைய புகாரில் தெரிவித்துள்ளார்.

மேலும் படிக்க