April 15, 2017 தண்டோரா குழு
பஞ்சாப் மாநிலத்தை சேர்ந்த 4 மாத குழந்தை 17 கிலோ எடையை கொண்டிருப்பதை கண்ட அதன் பெற்றோர் பீதியடைந்துள்ளனர்.
பஞ்சாப் மாநிலத்தை சேர்ந்த ரீனா குமார், சூரஜ் குமார் தம்பதிக்கு எட்டு மாதங்களுக்கு முன் ஒரு அழகான பெண் குழந்தை பிறந்தது. அந்த குழந்தைக்கு சாஹத் என்று பெயரிட்டனர். பிறக்கும்போது சராசரி குழந்தையாக இருந்த சாஹத், பிறந்து நான்கு மாதங்களில் அதனுடைய உடல் எடை 17 கிலோவாக இருப்பதை அதன் பெற்றோர் கவனித்துள்ளனர்.
சாஹத்தின் தாய் ரீனா கூறுகையில்,
“பிறக்கும்போது மற்ற குழந்தைகளை போல் சாதரணமாக இருந்தாள். ஆனால், பிறந்து நான்கு மாதத்தில் அவளுடைய எடை கூட தொடங்கியது” என்றார்.
சூரஜ் குமார் கூறுகையில்,
“அவளுக்கு அதிக பசி எடுப்பதால், நிறைய பாலும் உணவும் வேண்டுமென்று கேட்டு அதிகமாக அழுகிறாள். அதனால், அவள் கேட்டதை கொடுக்க வேண்டியுள்ளது. அவளை மருத்துவரிடம் அழைத்து சென்றோம். சிகிச்சை தொடங்குவதற்கு முன் அவளுடைய ரத்த மாதிரிகளை சேகரிக்க வேண்டும் என்று கூறினார். ஆனால், அவளுடைய தோல் கடினமாக இருப்பதால், அவர்களால் ரத்தத்தை சேகரிக்க முடியவில்லை” என்றார்.
சாஹத்துக்கு சிகிச்சை அளித்த மருத்துவர் வாசுதேவ் ஷர்மா கூறுகையில்,
“அவளுடைய உடல் எடை அசாதரணமான முறையில் அதிகரிக்கிறது. அதை முதலில் கட்டுப்படுத்த வேண்டும். அவள் 1௦ வயது குழந்தையை போல் உணவு சாப்பிடுவதை நிறுத்த வேண்டும். இதனால், அவளுக்கு மூச்சுவிடவும் சரியாக தூங்கவும் முடியாமல் அவதிப்படுகிறாள். மேலும், இந்த நோய்கான காரணத்தை சரியாக கண்டுப்பிடிக்க முடியவில்லை” என்றார்.