October 17, 2022
தண்டோரா குழு
கோவை மாநகராட்சி ஒப்பந்ததாரர்கள் நல சங்கத்தின் 2021-2022ம் ஆண்டிற்கான பொது குழு கூட்டம் கோவையில் நடந்தது. இதில் சங்கத்தின் தலைவர் உதயகுமார், பொது செயலாளர் சந்திர பிரகாஷ், பொருளாளர் அம்மாசையப்பன், துணை செயலாளர் மைக்கேல் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
இந்த கூட்டத்தில் மரணம் அடைந்த சங்க உறுப்பினர்கள் மாரப்பன், முருகேசன், மயில்வாணன் ஆகியோருக்கு மௌன அஞ்சலி செலுத்தப்பட்டது. சங்க உறுப்பினர்கள் இன்சூரன்ஸ் திட்டத்தின் மூலமாக மயில்வாணன் குடும்பத்தினருக்கு பத்து லட்ச ரூபாய் இன்சூரன்ஸ் தொகை வழங்கப்பட்டது.
கோவை மாநகராட்சியில் 18 மாதங்களுக்கு மேல் நிலுவையில் உள்ள திட்டப் பணிகளுக்கான பில் தொகையை உடனடியாக வழங்க வேண்டும் எனவும், கடந்த 6 ஆண்டு காலத்திற்கு மேலாக நிலுவையில் உள்ள 5 சதவீதம் பில்களில் பிடித்தம் செய்யப்பட்ட தொகையை மாநகராட்சி நிர்வாகம் உடனடியாக வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் இது தொடர்பாக கோவை மாநகராட்சி கமிஷனரை சந்தித்து வலியுறுத்த இந்த கூட்டத்தில் முடிவெடுக்கப்பட்டது.