May 22, 2017 தண்டோரா குழு
இங்கிலாந்தில் ஒரு தம்பதியினருக்கு 19-வது குழந்தை பிறந்துள்ளது.இந்த மிகப் பெரிய குடும்பத்தை கண்ட பொதுமக்கள் ஆச்சரியம் அடைந்துள்ளனர்.
இங்கிலாந்து நாட்டின் லண்டன் நகரிலுள்ள லண்காச்ட்டர் என்னும் இடத்தில் சூயி, நோயல் ராட்போர்ட் என்னும் தம்பதியினர் வசித்து வருகின்றனர். அவர்களுக்கு தற்போது 19-வது குழந்தை பிறந்துள்ளது.
அந்த குழந்தை பெண் குழந்தையாகும். 3.6 கிலோ எடை கொண்ட அந்த குழந்தைக்கு 9 சகோதரன் மற்றும் 9 சகோதரிகள் உண்டு. மோர்காம்பே என்னும் இடத்தில் பேக்கரி ஒன்றை அவர்கள் நடத்தி வருகின்றனர்.
“ ஒரு வருடத்திற்கு முன்பு எங்களுடைய மகள் ஹல்லி அல்பியா போ பிறந்தாள். அதற்கு பிறகு, வேறு குழந்தையை பெற்றுக்கொள்ள வேண்டாம் என்று முடிவெடுத்தோம். நாங்கள் எடுத்த முடிவு தவறி, தற்போது பீபி பிறந்து உள்ளாள். என் மகள் பீபி நல்ல ஆரோக்கியத்துடன் இருப்பது மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது” என்று சூயி தெரிவித்தார்.
குழந்தைகளை வளர்க்க ஆண்டு தோறும் 3௦,௦௦௦ பவுண்ட், இந்திய செலவாணி படி, 25 லட்சம் செலவு செய்கிறார்கள். ஒவ்வொரு குழந்தையின் பிறந்த நாளுக்கு 1௦௦ பவுண்ட் அதாவது 8000 ரூபாய், கிறிஸ்மஸ் விழாவிற்கு 8000 முதல் 2௦,௦௦௦ வரை செலவு செய்கிறார்கள். ஒவ்வொரு ஆண்டும் விடுமுறைக்கு வெளிநாடுகளுக்கும் சென்று வருகின்றனர். காலை உணவிற்கு 8 லிட்டர் பால் தேவைப்படுகிறது.
“முதலில் 3 பிள்ளைகள் போதும் என்று நினைத்தோம். ஆனால், குழந்தை பெரும் அனுபவத்தை பார்த்து மகிழ்ந்ததால், அடுத்தடுத்து குழந்தைகளை பெற்றோம்” என்று நோயல் கூறினார்.