December 16, 2017 தண்டோரா குழு
கடந்த 1971ம் ஆண்டு பாகிஸ்தானுக்கு எதிராக நடந்த போரில் இறந்த இந்திய வீரர்களுக்கு, காங்கிரஸ் கட்சியின் தலைவர் ராகுல் காந்தி இன்று(டிசம்பர் 16) அஞ்சலி செலுத்தினர்.
பங்களாதேஷ் நாடு உருவாக வழிவகுத்த இந்திய-பாகிஸ்தான் போரில், இந்திய வெற்றி பெற்றதன் அடையாளமாக, ஒவ்வொரு ஆண்டும், டிசம்பர் 16ம் தேதி, ‘விஜய திவாஸ்’ அனுசரிக்கப்பட்டு வருகிறது. அந்த போர் கடந்த 1971ம் ஆண்டு நிகழ்ந்தது. அந்த போரில் உயிரிழந்த இந்திய வீரர்களுக்கு, காங்கிரஸ் கட்சியின் தலைவராக பதவி ஏற்றுக்கொண்ட, ராகுல் காந்தி அஞ்சலி செலுத்தினர்.
இது தொடர்பாக அவர் தனது டுவிட்டர் பக்கத்தில்,
“1971ம் ஆண்டு, இந்தியாவிற்கும் பாகிஸ்தானுக்கு இடையே நடந்த போரின்போது, நமது வீரர்கள் செய்த தியாகத்திற்கு தலை வணங்குகிறோம். ஒவ்வொரு நாளும், இந்தியாவின் சுதந்திரத்தை பாதுகாக்கும், நமது வீரர்களின் அளவிட முடியாத மதிப்பை நினைவில் கொள்வோம்” என்று பதிவிட்டிருந்தார்.
1971ம் ஆண்டு நடந்த போரின்போது, சுமார் 9௦,௦௦௦ பாகிஸ்தானிய வீரர்கள் இந்திய வீரர்களிடம் சரணடைந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.