June 29, 2017
தண்டோரா குழு
சையது பீடி நிறுவனத்தில் இரண்டாவது நாளாக வருமான வரிதுறையினர் சோதனை நடத்தி வருகின்றனர்.
தமிழகத்தில் திருநெல்வேலியை தலைமையிடமாக கொண்டு செய்யது பீடி நிறுவனம் செயல்பட்டு வருகிறது.இந்நிலையில், முறையாக வரி செலுத்தவில்லை என்ற குற்றச்சாட்டின் அடிப்படையில் வருமான வரித்துறையினர் தமிழகத்தில் உள்ள செய்யது பீடி நிறுவனத்துக்கு சொந்தமாக 40 இடங்களில் சோதனை நேற்று மேற்கொண்டனர்.
மேலும், செய்யது பீடி கிளை நிறுவனம், செய்யது டிரேடிங், செய்யது ஹோம் இண்டஸ்ட்ரீஸ் உள்ளிட்ட நிறுவன கிளைகளில் சோதனை நடத்தினர்.
இந்நிலையில், நெல்லையில் உள்ள அந்நிறுவனத்தின் அதிபரின் வீடுகள் அலுவலகங்களில் வருமான வரி துணை ஆணையர் மைக்கேல் ஜெரால்டு தலைமையிலான குழுவினர் சோதனை நடத்தி வருகின்றனர்.