October 14, 2016
தண்டோரா குழு
சென்னை விமான நிலையத்திலிருந்து சிங்கப்பூருக்கு கடத்த முயன்ற ரூ.2 கோடி ஹவாலா பணம் கடத்த முயன்ற 4 பேரை கைது செய்து காவல் துறையினர் விசாரித்து வருகின்றனர்.
சென்னை விமான நிலையத்திலிருந்து சிங்கப்பூர் புறப்படத் தயாராக இருந்த விமானத்தில் ஹவாலா பணம் கடத்துவதாக வந்த தகவலையடுத்து விமானப் பயணிகளிடம் மத்திய வருவாய் புலனாய்வு அதிகாரிகள் திடீர் சோதனை நடத்தினர்.
இதில் சென்னையை சேர்ந்த இஸ்மாயில், தாஜுதின், முகமது ஆகியோரிடம் இருந்து ரூ.1.73 கோடி மதிப்புடைய அமெரிக்கா டாலர், தாய்லாந்து, யூரோ கரன்சி நோட்டுகள் கைப்பற்றப்பட்டது . பணத்தை பறிமுதல் செய்து 3 பேரையும் கைது செய்தனர்.
இதேபோல் மற்றொரு சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் விமானத்தில் பயணிகளின் உடைமைகளை அதிகாரிகள் சோதனை நடத்திய போது,அதில் சுற்றுலா விசாவில் சிங்கப்பூர் செல்ல வந்திருந்த சென்னை பெரம்பூரை சேர்ந்த சாகுல் ஹமீது என்பவரின் உடைமைகளை சோதனையிட்டனர்.அதில் அமெரிக்கா டாலர் மற்றும் யூரோ கரன்சிகள் இருந்தன. இதன் இந்திய மதிப்பு ரூ.17 லட்சம். இதையடுத்து, அவரது பயணத்தை அதிகாரிகள் ரத்து செய்து, பணத்தை பறிமுதல் செய்தனர்.
சென்னை விமான நிலையத்தில் ஒரே நாளில் சுமார் ரூ.2 கோடி மதிப்புடைய ஹவாலா பணம் பறிமுதல் செய்யப்பட்டு, 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இது குறித்து காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.