January 12, 2017
தண்டோரா குழு
ஜம்மு காஷ்மீர் பூஞ்ச் கட்டுப்பாட்டு எல்லை வழியாக ஊருடுவ முயன்ற 2 தீவிரவாதிகளை இந்திய ராணுவத்தினர் சுட்டுக் கொன்றனர்.
இச்சம்பவம் குறித்து இந்திய ராணுவத்தின் செய்தித் தொடர்பாளர் நிருபர்களிடம் புதன்கிழமை (ஜனவரி 11) கூறியதாவது:
ஜம்மு காஷ்மீர் எல்லைப் பகுதியில் இரண்டு தீவிரவாதிகள் ஊருடுவ முயன்றதை இந்திய ராணுவத்தினர் மீண்டும் முறியடித்துள்ளனர்.
பீடர் நாலா என்ற பகுதியில் 2 தீவிரவாதிகள் ஆயுதங்களுடன் ஊருடுவ முயன்றனர். அதை, ராணுவத்தினர் சரியான நேரத்தில் பார்த்து துப்பாக்கியால் சுட்டதில் இரு தீவிரவாதிகளும் உயிரிழந்தனர்.
அவர்களுடைய உடல்கள், ஆயுதங்கள் எல்லைக் கட்டுப்பாட்டு இடத்தில் உள்ளது. பாகிஸ்தான் எல்லைக் கட்டுப்பாட்டுக் கோட்டுப் பகுதியில் தீவிரவாதிகள் ஊருடுவ உடந்தையாக இருந்து அவர்களுக்கு ஆதரவு அளிக்க பாகிஸ்தான் தவறியதில்லை.
ஜனவரி 9ம் தேதி அக்னூர் பகுதி பட்டால் கிராமத்தில் உள்ள பொது ரிசர்வ் பொறியியல் படை முகாம் (GREF) மீது நடத்திய தாகுதலில் 3 கூலி தொழிலார்கள் பரிதாபமாக உயிரிழந்தனர்.
எல்லையில் உள்ள இந்திய ராணுவத்தினர் அதிக விழிப்போடு இருக்கின்றனர். பாகிஸ்தான் ஆதரிக்கும் தீவிரவாத இயக்கத்தை அடியோடு அழிக்க தயாராக உள்ளனர்.
இவ்வாறு அவர் தெரிவித்தார்.