June 10, 2017 தண்டோரா குழு
“Selfie with Daughter” என்ற புதிய மொபைல் செயலியை குடியரசுத்தலைவர் பிரணாப் முகர்ஜி இன்று தொடங்கி வைத்தார்.
கடந்த 2௦15ம் ஆண்டு, ஹரியானா மாநிலத்தின் சிந்த் மாவட்டத்திலுள்ள பிபிபூர் கிராமத்தின் முன்னாள் பஞ்சாயத்து தலைவர் சுனில் ஜக்லன் என்பவர் பெண் சிசுக்கொலை, மற்றும் பாலியல் உள்ளிட்ட வன்கொடுமைகளுக்கு எதிராக விழிப்புணர்வை நடத்தி வந்தார்.
ஒரு பெண் குழந்தையின் பெற்றோராக இருப்பது எத்தனை பெருமையான விஷயம் என்பதை இந்த சமுதாயம் புரிந்துக்கொள்ளவும், குழந்தை பாலின விகிதத்தை அதிகரிப்பது தான் இந்த பிரசாரத்தின் முக்கிய நோக்கமாகும்.
இந்திய குடியரசு தலைவர் பிரணாப் முகர்ஜி கூறுகையில்,
“பெண் சிசுக்கொலை மற்றும் பாலியல் உள்ளிட்ட வன்கொடுமைகளுக்கு எதிரான இயக்கம் ‘Selfie With Daughter’ ஆகும். பாலின ஏற்றத்தாழ்வுகளால் எழும்பும் பல பிரச்சனைகளை கையாள்வதில் இந்த பிரசாரம் மிகவும் உதவியாக இருக்கும்.இந்த மொபைல் செயலி மூலம்,பெண் குழந்தையை பெற்றவர்கள் மகளுடன் இணைந்து செல்பி எடுத்து அதை இந்த செயலியில் பதிவு செய்யலாம். இதன் மூலம் பாலினம் குறித்த ஏற்றத்தாழ்வு குறையும்.
மேலும் இந்த மொபைல் செயலியை குடியரசுத்தலைவர் பிரணாப் முகர்ஜி தொடங்கி வைத்து, சுனில் ஜக்லனுக்கு பாராட்டுக்களை தெரிவித்தார்.
அமெரிக்காவின் சிலிக்கான் வாலியில், கூகுள், பேஸ்புக் மற்றும் ஆப்பிள் ஆகிய சிறந்த தொழில்நுட்ப நிறுவனங்கள் அமைந்துள்ளது. அந்த நிறுவனங்களின் தலைவர்களை இந்திய பிரமதர் கடந்த 2௦15ம் ஆண்டு சந்தித்தார். அந்த சந்திப்பின்போது, ‘Selfie With Daughter’ சர்வதேச இயக்கமாக இருக்கும் என்று அப்போதே தெரிவித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.