• Download mobile app
25 Nov 2024, MondayEdition - 3211
FLASH NEWS
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு
  • தமிழ்நாட்டில் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் வெயில் பதிவு!
  • “சந்திரபாபு நாயுடு கூறும் அனைத்துமே கட்டுக்கதைகள்” – ஜெகன் மோகன் ரெட்டி
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

23 மத்திய கூட்டுறவு வங்கிகளும் லாபத்தில் இயங்க கூடிய ஒரே மாநிலம் தமிழகம்தான் – அமைச்சர் ஐ.பெரியசாமி

November 19, 2022 தண்டோரா குழு

69 வது அனைத்திந்திய கூட்டுறவு வார விழா கோவை கொடிசியா வளாகத்தில் நடைபெற்றது. இதில் கூட்டுறவு துறை அமைச்சர் ஐ.பெரியசாமி,மின்சாரத்துறை அமைச்சர் செந்தில்பாலாஜி,கூட்டுறவு துறை முதன்மை செயலர் ராதாகிருஷ்ணன், ஆட்சியர் சமீரண், மாநகராட்சி ஆணையாளர் பிரதாப், மேயர் கல்பனா ஆனந்தகுமார் உள்ளிட்டோரும், பல்வேறு மாவட்டங்களை சேர்ந்த சுமார் 10 ஆயிரம் பேருக்கு மேல் கலந்து கொண்டனர்.

விழாவில் சிறப்பு கூட்டுறவு சங்கம் மற்றும் பலவேறு போட்டிகளில் வெற்றி பெற்ற கூட்டுறவு உறுப்பினர்களுக்கு கோப்பைகள் பரிசுகள் வழங்கப்பட்டது.

முன்னதாக விழாவில் பேசிய கூட்டுறவு துறை அமைச்சர் ஐ.பெரியசாமி பேசும் போது:

இந்த ஆண்டு மகளிர் சுய உதவி குழுக்களுக்கு மிக அதிகமாக கடன் அளிக்க இருக்கின்றோம். மகளிர் செய உதவிகுழு திட்டம் கலைஞரால் உருவாக்கப்பட்டது.இந்த திட்டத்திற்கு அதிக அளவில் கடன் கொடுக்க முதல்வர் சொல்லி இருக்கின்றார். ஏற்கனவே 5000 கோடி நகைகடன் தள்ளுபடி செய்யப்பட்டு அவர்கள் சுபிட்சமாக இருக்கின்றனர்.கூட்டுறவு சங்கங்கள்தான்
பொருளாதாரத்தில் முன்னேறிய நாடாக மாற்றுகின்றது. சமத்துவம் இந்த கூட்டுறவில் இருக்கிறது.கூட்டுறவு துறை தலை நிமிர்ந்து நிற்கின்றது.கூட்டுறவு சங்கங்களில் பணிபுரயும் தொழிலாளர்களுக்கு சம்பள உயர்வு வழங்கப்பட இருக்கின்றது.

தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கிகளில் பணிபுரியும் ஊழியர்களுக்கு ஊதியம் உயர்த்தப்பட இருக்கின்றது. அனைத்து கூட்டுறவு ஓய்வு பெற்ற ஊழியர்களுக்கு ஓய்வூதியம் வழங்கப்பட இருக்கின்றது. நிதி நெருக்கடி இருந்தாலும் முதல்வர் இல்லை என்று சொல்லுவதில்லை, அனைத்து விவசாயிகளுக்கும் மின்சாரம் கொடுத்தது கலைஞர். 1.5 லட்சம் கடனில் இருந்தது மின்துறை. 10 ஆண்டுகளாக இலவச மின்சாரம் கொடுக்கவில்லை. ஒன்றாக ஆண்டுகளில் ஒன்றரை லட்சம் விவசாயிகளுக்கு மின் இணைப்பு கொடுக்கப்பட்டுள்ளது.

23 மத்திய கூட்டுறவு வங்கிகளும் லாபத்தில் இயங்க கூடிய ஓரே மாநிலம் தமிழகம்தான். தமிழகத்தில் 4451 கூட்டுறவு சங்கமும் லாபத்தில் இயங்க முயற்சி செய்ய வேண்டும்.அமைச்சராக பொறுப்பேற்ற பின் புதிய உறுப்பினர் சேர்க்கையில் கவனம் செலுத்தபட்டது. மாணவர்களுக்கு கல்வி கடன் பெற உறுப்பினராக சேர அனுமதிக்கப்பட்டது. வட்டியில்லாமல் மாடு வைத்திருப்பவர்களுக்கு தீவன கடன் வழங்கப்பட்டது. ஆட்சிக்கு வந்த பின் கைம்பெண்களுக்கு வட்டி சதவீதம் குறைக்கப்பட்டது.

தமிழகத்தில் கூட்டுறவு துறை முன்னணியில் இருக்கின்றது.தமிழகத்தில் விவசாயிகள் தேசிய மயமாக்கபட்ட, வணிக ரீதியான வங்கிகளுக்கு இணையாக கூட்டுறவு வங்கிகளில் வழங்கப்படும்.இந்தாண்டு 7300 கோடி கொடுத்துள்ளோம்.வரும் மார்ச் மாத்த்திற்குள் 12000 கோடி கடன் வழங்க இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.மாநிலம் முழுவதும் 33000 ரேசன் கடைகள் இயங்குகின்றன.இதில் 6900 கடைகள் வாடகை கட்டிடத்தில் இயங்குகின்றது.

ஏற்கனவே கடன் வாங்கிய தொடக்க வேளாண்மை வங்கிகளில் கடன் வழங்க இன்று முதல் அனுமதிக்கப்படும். இது மக்களின் அரசு, பொது நலனுக்கான உருவாக்கப்பட்ட மேன்மையான அரசு, நிறைய பேர் கூட்டுறவு வேலை கிடைக்கும் இடங்களில் வேலை பார்த்து வருகின்றனர்.180 மனுக்களில் பெரும்பாலான மனுக்கள் இடம் மாறுதல் கேட்டு வந்திருக்கின்றது.தமிழகத்தில் 7 கோடி மக்களில் ஒருவர் கூட துன்ப பட கூடாது என நினைக்கும் அரசு இது.தமிழகத்தில் பணி மாறுதல் தேவைபடுபவர்களுக்கு மாறுதல் வழங்கப்படும்.அதிகாரிகள் இதை பரீசிலனை செய்து வழங்குவார்கள்.

கூட்டுறவு துறையில் என்னென்ன இடர்பாடுகள் இருக்கின்றதோ அதை சரி செய்து கடன் தேவைபடுபவர்களுக்கு கடன் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும்.ஒரு கோடி பேர் தமிழகத்தில் வேலை இல்லாமல் இருக்கின்றனர். கூட்டுறவு துறைக்கு 6000 க்கும் மேல் ஆள் போட முதல்வர் அனுமதி அளித்துள்ளார்.நீண்ட காலமாக ஒழுங்கு நடவடிக்கை காரணமாக பலன்கள் பெறாமல் இருந்தவர்களுக்கு சிறப்பு அமைப்பு ஏற்படுத்தி நிவர்த்தி செய்யப்படும் என தெரிவித்தார்.

மேலும் படிக்க