January 11, 2017 தண்டோரா குழு
ஈராக் நாட்டில் 2,4௦௦ ஆண்டுகள் பழமை வாய்ந்த கல்லறை ஒன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.அமெரிக்காவில் உள்ள பாஸ்டன் பல்கலைக்கழகத்தை சேர்ந்த மைக்கேல் டாண்டி என்பவர் தலைமையில் தொல்பொருள் ஆராய்ச்சியாளர்கள் இந்த ஆய்வினை மேற்கொண்டனர்.
இது குறித்து தொல்பொருள் ஆராய்ச்சியாளர் செவ்வாய்க்கிழமை(ஜனவரி 1௦) கூறியதாவது:
ஈராக் நாட்டில் 2,4௦௦ ஆண்டுகள் பழமை வாய்ந்த எலும்பு கூடுகளுடன் உள்ள கல்லறை, காதணிகள், பீங்கான் பொருள்கள், இரட்டை தலை பாம்புகள் உற்றுநோக்குவது போல் அமைந்துள்ள காப்பு கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
மத்திய கிழக்கு நாட்டை (கிமு 55௦ முதல் 33௦) ஆண்ட அக்கீமெனிட் பேரரசு காலத்தில் இந்த கல்லறை கட்டப்பட்டது. மாவீரன் அலெக்சாண்டரால் தோற்கடிக்கப்பட்டு கைப்பற்றப்பட்ட இடமாகும்.
அக்கல்லறையில் இருந்த உடல்கள் சரி செய்யாத நிலையில் இருந்ததால் அதில் எத்தனை பேர் புதைக்கப்பட்டனர் என்று சரியாக தெரியவில்லை. இந்த சரி செய்யப்படாத உடல்களை பார்க்கும்போது பண்டைய காலத்தில் இக்கல்லறையை தோண்டி இதில் இருந்த பொருள்கள் திருடப்பட்டிருக்கும் என்று நினைக்கிறோம்.
இரண்டு காதணிகள் மற்றும் 48 மண் பானைகளின் எஞ்சியுள்ள பகுதிகள் அங்கே இருந்தன. அந்த 48 மண் பானைகளில் 5 பானைகள் அப்படியே இருந்தன. ஒன்று நீர்குழாய் வடிவில், மூன்று ஜாடிகள், மற்றும் மிக சிறிய அளவிலுள்ள ஜாடி இருந்தது. இவை ஒரு எலும்பு கூட்டின் அருகில் இருந்தது.
இந்த மட்பாண்டங்கள், சிறு உலோக பொருள்கள் இறந்த மனிதர்கள் மிகவும் சாதாரண குடும்பத்தை சேர்ந்தவர்கள் என்று தெரிகிறது. மேலும், 4௦௦ முதல் 1,3௦௦ ஆண்டுகளுக்கு இடையே அதில் ஆறு உடல்கள் புதைக்கப்பட்டுள்ளது. அதே கல்லறையில் மேலும் ஐந்து பேரை அதில் புதைக்கப்பட்டுள்ளது.
இவ்வாறு அவர் தெரிவித்தார்.